2024ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக சந்தையில் வர்த்தகம் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில் இந்த 4 நாள் விடுமுறை உடன் வரும் தீபாவளி பண்டிகையில் எப்படியாவது இழந்த வரத்தகத்தை பெற்றிட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களும் துடியாய் துடிக்கிறது. இதற்காக எடுத்த ஆயுதம் தான் விளம்பரம்.
இந்தியாவின் முன்னணி நுகர்வோர் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், செப்டம்பர் காலாண்டில் விற்பனையை அதிகரிக்க தங்கள் விளம்பர மற்றும் மார்கெட்டிங் பட்ஜெட்டை அதிகரித்து, செலவுகளைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.

நெஸ்ட்லே, கோல்கேட்-பால்மோலிவ், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், மாருதி சுசூகி, வோக்ஸ்வாகன், ஸ்கோடா மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் விளம்பர மற்றும் மார்கெட்டிங் செலவுகளை அதிகரித்து அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்ற முக்கியமான இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பல நிறுவனங்கள் இதை டிசம்பர் மாதம் வரையில் நீட்டிக்கவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உதாரணமாக, கோல்கேட்-பால்மோலிவ், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் செலவுகளை 17.8% அதிகரித்து ரூ.242 கோடிக்கு கொண்டு சென்றுள்ளது. இதை தொடர்ந்து, டிசம்பர் காலாண்டிலும் விளம்பர செலவுகளைத் தொடர்ந்து அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸும் கடந்த காலாண்டில் செய்தது போலவே விளம்பர முதலீடுகளை படிப்படியாக அதிகரிக்கும் நோக்கில் உள்ளது.
நெஸ்ட்லே இந்தியாவும் செப்டம்பர் காலாண்டில் விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் முதலீடுகளை முன்னுரிமைப்படுத்தியுள்ளதாகவும் இதன்மூலம் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் யூனிவர்சல், நெஸ்ட்லே, டாடா கன்ஸ்யூமர், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் மற்றும் டாபர் போன்ற பெரிய எஃப்எம்சிஜி நிறுவனங்கள், உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நகர்ப்புற நுகர்வோர் தேவை பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டாலும், கிராமப்புற தேவை மீண்டு வருவதையும் குறிப்பிட்டுள்ளன. இதனால் கடந்த 5 மாதத்தில் கிராம்புறத்தில் விளம்பரத்தையும், தள்ளுபடிகளையும் அதிகரித்துள்ளனர்.
இதேபோல் ஆட்டோமொபைல் துறையில், மருதி சுசூகி, வோக்ஸ்வாகன், ஸ்கோடா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பண்டிகைக் காலத்தில் புதிய வாகனங்கள் வாங்குபவர்களை ஈர்ப்பதற்காக தங்கள் மார்கெட்டிங் முயற்சிகளை அதிகரித்து வருகின்றன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications