தீபாவளி பண்டிகையை இந்திய மக்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடி வரும் வேளையில், பல இடத்தில் பல விசித்திரமான சம்பவங்கள் நடக்கும். ஒவ்வொரு முக்கிய பண்டிகைக்கும் வீடு முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவது போல் இந்த தீபாவளி பண்டிகைக்கும் வட இந்திய குடும்பம் ஒன்று வீட்டை சுத்தும் செய்யும் போது ஆச்சரியமான விஷயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இன்ஸ்டாகிராமில் டீப்தி கபா என்ற பயனாளர் பதிவிட்ட வீடியோவில், தீபாவளி பண்டிக்கைக்காக வீட்டைச் சுத்தம் செய்யும் போது ஒரு பெண் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்ததாக வீடியோ பதிவிட்டு உள்ளார்.

2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த பிறகு இந்த நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளும் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்த வீட்டில் கத்தை கத்தையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்ட இந்த பணத்தை, மறைத்து வைத்த அந்த பெண்ணே மறந்துவிட்டது சிரிப்பை மூட்டுகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்திருந்தால் அதை ஆர்பிஐ அலுவலகத்திற்குச் சென்று மாற்றியிருக்க முடியும், ஆனால் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வாய்ப்புகள் தற்போது மூடப்பட்டு உள்ளது.
இந்த வீடியோ வெளியிடப்பட்டதிலிருந்து பெரிய அளவில் வைரலாகி, மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சமூக ஊடக பயனர்கள் பல்வேறு விதமான கமெண்ட்களை போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
மற்றொரு அதிர்ச்சி சம்பவம்..!
இதேபோல் சில நாட்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த 55 வயதான லீனா ம்காத்ரே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டை சுத்தம் செய்ய ஒரு மொபைல் ஆப் மூலம் சுத்தம் செய்ய ஆட்களை அழைத்திருந்தார். சுத்தம் செய்ய வந்த இரண்டு தொழிலாளர்கள் அவரது அலமாரியில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தீபாவளி தூய்மைப்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மொபைல் ஆப் மூலம் சேவைகளைப் பதிவு செய்யும் போது, தொழிலாளர்களின் பின்னணி சரிபார்ப்பை உறுதி செய்வது முக்கியம். அத்துடன் வீட்டில் மதிப்புமிக்க பொருட்கள் இருந்தால், அவற்றைப் பாதுகாப்பான இடத்தில் வைப்பதும் அவசியம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications