இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவை (EMS) நிறுவனமான டிக்சன் டெக்னாலஜிஸ், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் தனது லேப்டாப் மற்றும் நோட்புக் ஒப்பந்த உற்பத்தி வர்த்தகத்தில் ரூ.4,500-ரூ.5,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த மாபெரும் இலக்கை அடைய டிக்சன் நிறுவனம் கைகொடுப்பது சென்னை தான், இந்நிறுவனம் பல வருடங்களாக வட இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னோடியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து லேப்டாப் அமைக்கத் தயாராகியுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் 5 முன்னணி லேப்டாப் பிராண்டுகளில் நான்கை வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்துள்ளது டிக்சன் நிறுவனம்.
IT ஹார்டுவேருக்கான மத்திய அரசின் PLI திட்டத்தின் கீழ், டிக்சன் திட்டத்தின் ரூ.48,000 கோடி வருவாய் ஈட்ட ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆரம்ப இலக்கு மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.4,500-ரூ.5,000 கோடி வரம்பில் தனது லேப்டாப் மற்றும் நோட்புக் வணிகத்தைத் துவங்க உள்ளது.
HP மற்றும் Asus உடன் டிக்சன் வணிக ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது, மேலும் Acer மற்றும் Lenovo உடன் இறுதி ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளன. இதன் பொருள் இந்தியாவின் முதல் ஐந்து லேப்டாப் பிராண்டுகளில் நான்கு டிக்சன் மூலம் தயாரிக்கப்படும்.
டிக்சன் நிறுவனம் ஏற்கனவே ஏசர் லேப்டாப் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது, அதே நேரத்தில் Lenovo உற்பத்தி தற்போதைய காலாண்டில் நொய்டா தொழிற்சாலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, டிக்சனின் சென்னை தொழிற்சாலை, 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் டிசம்பர் 2024 இறுதிக்குள் செயல்படும்.
டிக்சன் நொய்டாவில் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைக்கு அருகில் கூடுதலாக 1.5 சதுர அடி இடத்தை தொழிற்சாலை விரிவாக்கத்திற்காகக் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் இந்நிறுவனம் நடப்பு காலாண்டிலிருந்து மாதத்திற்குக் கூடுதலாக 400,000 ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது.
டிக்சன் ஏற்கனவே சாம்சங், சியோமி, ஒப்போ, மோட்டோரோலா மற்றும் டிரான்ஸியன்-ஐஸ்மார்டு பிராண்டுகள் போன்ற டெக்னோ, ஐடெல் மற்றும் இன்ஃபினிக்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கான ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் நான்கு செயல்பாட்டு தொழிற்சாலைகளை கொண்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications