சென்னை: இந்தியாவில் தற்போது ஸ்மார்ட்போன் துவங்கி ட்ரோன் வரையில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு ஹப் ஆக இருப்பது சென்னை தான். ஆப்பிள் முதல் கூகுள் வரையில் சென்னையில் தனது எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரித்து இந்தியாவிலும், உலகளவிலும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் ஒப்பந்த உற்பத்தியாளரான டிக்சன் டெக்னாலஜிஸ், சென்னையில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்நிறுவனத்தின் தலைவரே வெளியிட்டு உள்ளார்.
பாக்ஸ்கான்-க்கு இணையாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் முன்னேறி வரும் உள்நாட்டு நிறுவனமான டிக்சன் டெக்னாலஜிஸ், தமிழ்நாட்டில் தனது உற்பத்தி தளத்தை அமைத்து வருகிறது. இப்புதிய தொழிற்சாலையில் நாட்டின் டாப் ஐந்து லேப்டாப் பிராண்டுகளில் நான்கு நிறுவனங்களுக்கான லேப்டாப் தயாரிக்கப்பட உள்ளது கூடுதல் சிறப்பு.

இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்த டிக்சன் டெக்னாலஜிஸ் சென்னையில் அமைக்க உள்ள தொழிற்சாலை அடுத்த 8-10 மாதங்களில் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அதுல் பி லால் தெரிவித்துள்ளார்.
சென்னை தொழிற்சாலை குறித்து அதுல் லால் பேசுகையில் "நாட்டில் உள்ள டாப் ஐந்து உள்ளூர் பிராண்டுகளில் நான்கு நிறுவனங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த 4 பிராண்டுகளுக்காக சென்னையில் புதிய உற்பத்தி வளாகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலைக்கான இடத்தை கண்டறிந்து, தேவையான அனுமதிகளையும், முக்கிய ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளோம்" என்று அதுல் லால் தெரிவித்துள்ளார்.
"இதனால் அடுத்த 8-10 மாதங்களில் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளைத் திட்டமிட்டுள்ளோம். இந்த தொழிற்சாலை எங்களின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றும். மொபைல் துறையில் நாங்கள் எட்டிய உயரத்தை சென்னை தொழிற்சாலை மூலம் IT ப்ராடெக்ட்கள் பிரிவிலும் பெற நாங்கள் விரும்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.
டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏற்கனவே ஏசர் நிறுவனத்திற்கு லேப்டாப்-களை தயாரித்து வருகிறது. லெனோவோ பிராண்டுக்கான புதிய தயாரிப்பு அறிமுக செயல்முறையைத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் 2025 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை தொழிற்சாலை நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும். உலகளாவிய பிராண்டுகளைப் வாடிக்கையாளர்களாகப் பெறுவதற்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது என தொழிற்சாலை கட்டுமானம் முடிந்த உடனேயே முழுவீச்சில் உற்பத்தி பணிகளை டிக்சன் டெக்னாலஜிஸ் தொடர உள்ளது. இந்தியாவில் IT ப்ராடெக்ட் சந்தையின் மதிப்பு சுமார் 10 பில்லியன் டாலர்கள் என்றும், இதில் டிக்சன் டெக்னாலஜிஸ் போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூன் காலாண்டில் டிக்சன் டெக்னாலஜிஸ்நிறுவனத்தின் வருவாய் 101 சதவிகிதம் அதிகரித்து 6,588 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 109 சதவிகிதம் அதிகரித்து 140 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதில் பெரும்பாலானவை மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி சேவை பிரிவுகளில் இருந்து கிடைத்தது. மோட்டோரோலா மற்றும் சியோமி நிறுவனங்களுக்கான உற்பத்தி அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications