கார்டன் சிட்டி என அழைக்கப்பட்ட பெங்களூர் நகரம் கடந்த 20 வருடத்தில் மாபெரும் கான்க்ரீட் காடுகளாக மாறியுள்ளது என்ற விமர்சனம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இதை உடைக்கும் வண்ணம் கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு இருந்த 220வது லால்பாக் மலர் கண்காட்சியை திறந்து வைத்து பேசிய போது பெங்களூரில் பசுமை பகுதியை அதிகரிக்கவும், மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் பெங்களூரில் லால்பாக் போலவே புதிதாக 3 பார்க் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டிகே சிவகுமார் புதிதாக உருவாக்கப்படும் பார்க் எந்த இடத்தில் வருகிறது என்பதையும் தெரிவித்துள்ளார். மூன்றில் ஒரு பார்க் மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட உள்ளது. இங்கு பார்க் அமைக்கப்பட வேண்டுமாயின் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ஒப்புதல் வேண்டும். மற்ற இரண்டு பூங்காக்கள் பெங்களூர் நகருக்குள் இருக்கும் காடுகள் பகுதிகளில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
எந்த இடம்?
மத்திய பாதுக்காப்பு துறைக்கு சொந்தமாக சுமார் 452 ஏக்கர் நிலம் யலஹங்கா ஹோப்லி (Gantiganahalli) பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலத்தை இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
பெங்களூரு நகருக்குள் இருக்கும் காடுகள் சார்ந்த இடம் என்றால் தெற்கு பெங்களூரில் கனகபுரா சாலையில் இருக்கும் துரஹள்ளி காடுகள், யலஹங்கா பகுதியில் இருக்கும் அவலாஹள்லி காடுகள், வட பெங்களூர் பகுதியில் இருக்கும் ஹென்னூர் மூங்கில் காடுகள். இதில் 2 இடத்தை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பாதுகாப்பு துறையிடம் ஒப்புதல் பெற தான் கடிதம் எழுதியுள்ளதாகவும், விரைவில் பாதுகாப்பு துறை அமைச்சரை இதற்காக சந்திக்க உள்ளதாகவும் டிகே சிவகுமார் தெரிவித்தார். இந்த மாபெரும் 3 botanical garden திட்டத்தை செயல்படுத்த 3 முக்கிய அமைப்பு ஒன்று சேர முடிவு செய்துள்ளது, பெங்களூர் நிர்வாகம் புதிதாக உருவாக்கிய கிரேட்டர் பெங்களூரு அத்தாரிட்டி, பெங்களூர் டெவலெப்மென்ட் அத்தாரிட்டி, தோட்ட வளக்கலை துறை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஐடி நகரமாக இருக்கும் பெங்களூரில் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் மக்கள் ஏதுவாக வாழ்வதற்கான இடமாக இல்லை என்ற கருத்தை மாற்றுவதற்காக கர்நாடக அரசு அடுத்த 5-10 வருடத்தில் மொத்த பெங்களூரையும் மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு, நிர்வாக அளவிலும் மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது.
இதேவேளையில் பெங்களூரை மீண்டும் Garden City பெயரை மீட்டு எடுக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டு உள்ளது, இதன் முதல் படியே 3 பார்க். பெங்களூரின் முக்கிய அடையாளமாக விளங்கும் இந்த பூங்காக்கள் தான் நகரின் ஒட்டுமொத்த காற்று சுத்திகரிப்பானாக விளங்குகிறது. இந்த நிலையில் புதிதாக 3 பார்க் உருவாக்கப்படுவது நகரின் liveability அதிகரிக்கும் இது நீண்ட கால வளர்ச்சிக்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications

