வணிகம் சார்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரான டிஎல்எஃப் நிறுவனம், கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 25.89% வளர்ச்சியினை கண்டு, 477.04 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதே கடந்த ஆண்டில் இதன் லாபம் 378.73 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் வரிக்கு பிந்தைய லாபமானது 1.59% அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 469.57 கோடி ரூபாயாக இருந்தது.
நிதி திரட்ட திட்டம்
இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு மாற்ற முடியாத கடனீட்டு பத்திரங்கள் மூலம் 1500 கோடி ரூபாய் நிதி திரட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தின் டாப் லைன் முன்பகுதி 12.06% குறைந்து, 1480.90 கோடி ரூபாயில் இருந்து, 1302.34 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே முதல் காலாண்டில் வெளியிடப்பட்ட 1441.63 கோடி ரூபாயில் இருந்து, 9.66% சரிவினைக் கண்டுள்ளது.
எபிட்டா விகிதம்
இதன் எபிட்டா விகிதம் 436.7 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது (இது ஆய்வில் உள்ளது). இது முந்தைய ஆண்டில் 458.3 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 4.7% சரிவினைக் கண்டுள்ளது. இதே மார்ஜின் 33.5% ஆக விரிவடைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 30.9% ஆக உள்ளது.
செலவினமும் சரிவு
டிஎல்எஃப்-ன் செலவினம் 1009.27 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆணில் 1235.79 கோடி ரூபாயாக இருந்தது. இதே முதல் காலாண்டில் 1170.52 கோடி ரூபாயாக இருந்தது.
முதல் பாதி நிலவரம்
இதே ஆறு மாத காலத்தில் டிஎல்எஃப்-ன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 946.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 716.05 கோடி ரூபாயாக இருந்தது. இதன் வருவாய் விகிதம் முதல் பாதியில் 2743.97 கோடி ரூபாயாக உச்சம் எட்டியுள்ளது. இதே கடந்த ஆண்டில் 2620.43 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்கு நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 0.96% குறைந்து, 369.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 375 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 364.60 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 0.91% குறைந்து, 370.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 374.85 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 364.80 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 444 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 294.75 ரூபாயாகவும் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications