இந்தியாவில் மண்ணுக்கும், பொன்னுக்கும் எப்போதும் டிமாண்ட் குறையாது என்பதை ஒவ்வொகு நிகழ்வும் உறுதி செய்கிறது என்றால் மிகையில்லை. இந்திய மக்கள் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து வாங்குவதை போலவே தற்போது புதிய வீடுகளை வாங்குவதிலும் சளைத்தவர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
முதலீட்டு வல்லுனர்கள் பெரு நகரங்களில் பெரும் தொகை கொடுத்து சொந்த வீடு வாங்குவது தவறான முடிவு என தொடந்து கூறிவந்தாலும், சொந்த வீடு என்பது மக்களுக்கு எப்போதும் எமோஷ்னலான முடிவாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம் விற்பனை செய்த வீடுகள் குறித்து தான் தற்போது நாடே பேசி வருகிறது.

மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் DLF ஹோம் டெவலப்பர்ஸ் லிமிடெட், டிரைடென்ட் ரியால்டியுடன் இணைந்தும், தங்களுடைய முதல் வீட்டு திட்டமான The Westpark Phase 1-ஐ அறிமுகம் செய்து ஒரு வாரத்திலேயே முழுமையாக விற்று முடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த மாபெரும் ரெசிடென்ஷியல் திட்டத்தில் சுமார் 416 வீடுகள், நான்கு 37 தளங்களைக் கொண்ட கட்டிடங்களில் அமைய உள்ளது. இந்த வீடுகள் விற்பனைக்கா அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் மொத்தமும் விற்பனையாகி சுமார் ரூ.2,300 கோடி அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது.
இதன் மூலம் DLF-ன் மும்பை ரெசிடென்ஷியல் சந்தையில் தனது என்டரியை மிகவும் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வீட்டின் விலை தான்.
இந்த The Westpark Phase 1 திட்டம் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியாகவும், 5.18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. DLF நிர்வாகம் ஆரம்பத்தில் இரண்டு கட்டிடங்கள் மட்டுமே அறிமுகப்படுத்த திட்டமிட்டது, ஆனால் மக்கள் மத்தியில் பெரும் டிமாண்ட் இருப்பதை உணர்ந்து 4 டவர்களில் இருக்கும் 416 வீடுகளையும் விற்பனை செய்ய முடிவு செய்தது.
இந்த திட்டத்தில் 3 BHK மற்றும் 4 BHK வீடுகள், 1,125 முதல் 2,500 சதுர அடி வரையிலான கார்பெட் பரப்பளவில் கட்டப்பட உள்லது. மேலும் சில பென்ட்ஹவுஸ்களும் இந்த திட்டத்தில் கட்டப்பட உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தில் ஒரு வீட்டின் ஆரம்ப விலை 5.63 கோடி ரூபாய். அதிகப்பட்சமாக 7.59 கோடி ரூபாய் வரையிலான அறிமுக விலை நிர்ணயம் செய்துள்ளது.
DLF-ன் இந்த வெற்றி அறிவிப்பைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூலை 25, 2025) பங்கு விலை காலை வர்த்தகத்தில் ரூ.829 வரையில் உயர்ந்தாலும் வர்த்தகம் முடியும் போது 824.10 ரூபாய் விலையில் 0.59 சரிவை பதிவு செய்துள்ளது. இந்த பங்குகள் இன்னும் 52 வார உயர்வான 929 ரூபாய் அளவீட்டை ஒப்பிடுகையில் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் DLF பங்கு விலை 21 சதவீதமும், 6 மாதத்தில் 17 சதவீதமும் உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 493 சதவீதம் உயர்ந்து ஒரு மல்டிபாக்கர் பங்காகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் இப்பங்குகள் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications