இந்தியாவில் அண்மை காலமாக அலுவலக இடங்களுக்கான ரியல் எஸ்டேட் சந்தை வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இந்திய பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக DLF திகழ்கிறது. அதன்படி, வளர்ந்து வரும் இந்திய தொழில் பிரிவினர்களுக்கான வசதி நிறைந்த குடியிருப்பு மற்றும் பணியிடமாக கட்டுமான நிறுவனமான DLF நிறுவனம் குருகிராமை உருவாக்கியது. இந்நிறுவனம் 24 நகரங்களிலும் 15 மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. மேலும் இது, சில்லறை, வணிக மற்றும் குடியிருப்பு சொத்துக்களைக் கையாண்டு வருகிறது.
DCCDL என்பது (DLF Cyber City Developers Limited), டிஎல்எப் மற்றும் சிங்கப்பூரின் sovereign wealth fund GIC இடையே உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும், மற்றும் இது முக்கியமாக உயர் தரமான வர்த்தக மற்றும் அலுவலக சொத்துகளைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது ஆகும். மேலும் DLF இந்த கூட்டு நிறுவனத்தில் கிட்டத்தட்ட 67 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

இந்தநிலையில், தற்போது, ரூ.6,000 கோடியை முதலீட்டில் வணிகவளாகங்களை கட்ட திட்டமிட்டுள்ளது. அதாவது, உயர்தர பசுமை வணிக இடங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, ரியல் எஸ்டேட் நிறுவனமான DLF-இன் வாடகைப் பிரிவான DLF சைபர் சிட்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் (DCCDL), குருகிராமில் 75 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரதான அலுவலகம் மற்றும் சில்லறை விற்பனை இடங்களை கட்ட சுமார் ரூ.6,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக PTI- செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான எதிர்கால திட்டங்களை பகிர்ந்த டிஎல்எஃப் நிறுவனம், அதன் வாடகை பிரிவான DCCDL-ன் அல்ட்ரா-பிரீமியம் வர்த்தக திட்டமான 'DLF Downtown, Gurugram' இன் புதிய நிலைப்பகுதியில் 5.5 மில்லியன் (55 லட்சம்) சதுர அடி உயர்தர A பிளஸ் அலுவலக இடங்களை கட்டத் துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தவிர, குருகிராமில் உள்ள மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், DLF Mall of India-வின் கட்டுமானத்தையும் டிசிசிடிஎல் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, இதுவரை, 3.7 மில்லியன் (37 லட்சம்) சதுர அடி பரப்பளவு நிறைவடைந்துள்ளது. இந்த அலுவலக காம்ப்ளெக்ஸ் மற்றும் ஷாப்பிங் மாலின் கட்டிடப் பணிகளில் மொத்த முதலீடு, சுமார் ரூ. 6,000 கோடி ஆகும்
மேலும், DLF குழுமத்தின் வாடகை-வருவாய் சொத்துக்களில் பெரும்பகுதியை சொந்தமாகக் கொண்ட DCCDL,40.4 மில்லியன் சதுர அடி செயல்பாட்டு வாடகை போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது, அதில் 36.4 மில்லியன் சதுர அடி அலுவலக இடமாகவும், 4 மில்லியன் சதுர அடி சில்லறை விற்பனை ரியல் எஸ்டேட் இடமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, டிஎல்எப் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஷிராம் கட்டார் கூறுகையில், "உலகளாவிய நிறுவனங்கள், குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள், உயர்தர மனித திறமை மற்றும் உலகத்தரம் வாய்ந்த வணிக இடங்களால் ஈர்க்கப்படுகின்றன என்றும் இந்த நிறுவனங்கள் நிலைத்தன்மை, பசுமை முயற்சிகள், சமூக உள்கட்டமைப்பு மற்றும் அளவிடுதல் ஆகியவற்றில் உயர் மதிப்பீடு பெற்ற கிரேடு A++ அலுவலக இடங்களைத் தேடுகின்றன என்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) முக்கிய நகரங்களில் அலுவலக தேவையை அதிகரிப்பதாகவும் கட்டார் குறிப்பிட்டார்.
ஷாப்பிங் மால் விரிவாக்கம் குறித்து கட்டார் கூறுகையில், "இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும், இதில் ஒரு பெரிய நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார ரீதியாக முன்னேற விரும்புகிறார்கள். இது நகர்ப்புற மையங்களுக்குள் அதிக அளவில் நுழைவதோடு சேர்ந்து சில்லறை விற்பனையில், குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையில் வலுவான வளர்ச்சியை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications