இந்திய மக்களின் மிகவும் பிடித்தமான அதேவேளையில் பணத்தை மிச்சப்படுத்தக்கூடிய ரீடைல் கடையான டி-மார்ட் இயக்கும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம், மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டி-மார்ட் பிராண்ட் இந்திய மக்களுக்கு பிடித்தமான பிராண்டாக இருப்பது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தமான நிறுவனமாக உள்ளது. காரணம் இந்தியாவில் மிகவும் லாபகரமான சிறப்பான வர்த்தக மாடல் கொண்டு இயங்கும் முக்கியமான ரீடைல் பிராண்டாக டிமார்ட்-டின் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் விளங்குகிறது.

இந்த நிலையில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் மார்ச் காலாண்டில் ரூ.563 கோடி நிகர லாபத்தை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 22.5 சதவீதம் அதிகமாகும்.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் இக்காலாண்டில் ரூ.12,726.6 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு நாளுக்கு 139.85 கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்று வருமானம் ஈட்டி வருகிறது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம் என்று நிறுவனம் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தனது மார்ச் காலாண்டு முடிவில் அறிவித்துள்ளது.
வருவாய், வரிக்கு முந்தைய லாபம் (EBITDA), நிகர லாபம் ஆகிய அனைத்து முக்கிய நிதி அளவுகோல்களில் இந்த நிதியாண்டில் வளர்ச்சியைக் கண்டுள்ளது அவென்யூ சூப்பர்மார்ட்ஸ். இது முதலீட்டாளர்கள் மத்தியில் பாராட்டப்படும் விஷயமாக உள்ளது.
இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் டி-மார்ட் கடைகளின் விற்பனை, 2024 நிதிய ஆண்டில் 2023 நிதிய ஆண்டைக் காட்டிலும் 9.9 சதவீதம் அதிகரித்துள்ளது. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் தற்போது 284 கடைகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கி வருகிறது.
2024ம் நிதிய ஆண்டில் டி-மார்ட் நிறுவனம் 41 புதிய கடைகளை திறந்துள்ளது, இதன் மூலம் மொத்த கடைகளின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் இ-காமர்ஸ் பிரிவான டி-மார்ட் ரெடி, தனது சேவையை குருகிராமில் தொடங்கியுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள நகரங்களில் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் 23 நகரங்களில் டி-மார்ட் ரெடி சேவை உள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 50 குறியீடு 0.76 சதவீதம் சரிந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் 0.29 சதவீதம் உயர்ந்து ரூ.4,618.45 என்ற விலையில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
கடந்த 12 மாதங்களில், நிறுவனத்தின் பங்குகள் 28.85 சதவீதம் உயர்ந்துள்ளன. இருப்பினும், 2021 அக்டோபர் 18ம் தேதி ரூ.5,900 என்ற உச்ச விலையைக் காட்டிலும், நிறுவனத்தின் பங்குகள் தற்போது சுமார் 25 சதவீதம் குறைவாக உள்ளன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications