இந்திய ரீடைல் சந்தையில் தற்போது அடுத்து தலைமுறை வர்த்தகமாக பார்க்கப்படும் 10 நிமிட டெலிவரி சேவையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்துக்கொண்டு இருக்கையில் லாபம், வருவாய் குறித்த கேள்வி சந்தையில் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக செப்டோ தனது ஐபிஓ திட்டத்தில் இருந்து பின் வாங்கியதும் அதன் வர்த்தக மாடல் குறித்த கேள்வி பங்குச்சந்தையில் இன்றளவும் எதிரொலித்து வருகிறது. பெரு நகரங்களில் தற்போது பால், தயிர், ஐஸ்கிரீம், பிஸ்கட், தங்க காயின், ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் உட்பட அனைத்தும் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

இத்தகைய குவிக் காமர்ஸ் பிரிவுக்கான வாடிக்கையைாளர்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். ஆனால் இத்தகைய சேவையை அளிக்கும் செப்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் நிறுவனங்களின் வருமானத்தை பார்க்கும் போது, டிமார்ட் 3 நிறுவனத்தையும் மொத்தமாக மடித்து விகரம் கமல்ஹாசன் போல் பீடா போட்டு சென்றுள்ளது.
வீட்டில் சோஃபா-வில் இருந்தபடியே ஆர்டர் செய்தால் 10 நிமிடத்தில் பெரும்பாலான பொருட்கள் வந்துவிடுகிறது, ஆனால் டிமார்ட் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் வீட்டில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு, கடைக்கு சென்று டிராலி எடுத்து பில் போட்டு வெளியில் வருவதற்கு நாக்கு தள்ளிவிடும். ஆனாலும் மக்கள் அதிகளவில் டிமார்ட்-க்கு தான் செல்கின்றனர் என்பது அதன் வருவாய் அளவீட்டை வைத்து பார்த்தாலே புரிந்துக்கொள்ள முடிகிறது.
2026ஆம் நிதியாண்டின் நிதி நிலை அடிப்படையில் செப்டோ, இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் ஆகிய 3 நிறுவனங்களின் மொத்த வருவாய் 64000 கோடி ரூபாய், இதுவே டிமார்ட்-ன் வருவாய் 68821 கோடி ரூபாயாக உள்ளது.
ஏன் இந்த நிலை..? குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் மக்களுக்கு வசதிகளை விற்கிறது, இதற்கான விலையை கட்டாயம் கொடுத்தாக வேண்டும். ஆனால் டிமார்ட் மக்களுக்க தேவையான வருடம் முழுவதும் அவசியமான பொருட்களை மலிவான விலையில் விற்கிறது. இதன் மூலம் BORING பிஸ்னஸ் மாடல் தொடர்ந்து வெற்றி அடைந்து வருகிறது.
மேலும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் குவிக் காமர்ஸ் வர்த்தகம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் பல நிறுவனங்கள் பிரத்தியேகமாக குவிக் காமர்ஸ் பிரிவுக்காக திறக்கப்பட்டாலும் வர்த்தகம், வருமானம் இல்லாமல் தோல்வி அடைந்து திவாலாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் இது வெற்றிப்பெற முக்கிய காரணம் அடத்தியான மக்கள் தொகை.
இதேவேளையில் இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் ஜாம்பவான் ஆக இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் உடன் ஒப்பிடும் போது சுமார் 20160 கடைகள் உடன் 3,28,202 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.
ஜியோமார்ட் பிரிவில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனமும் குவிக் காமர்ஸ் சேவை அளித்து வருகிறது, மேலும் ரிலையன்ஸ் ரீடைல் FMCG பொருட்களை தாண்டி ஆடை, எலக்ட்ரானிக்ஸ் என பலவற்றை தனிதனி பிபிராண்டு கடைகளாக விற்கிறது.
டிமார்ட் - ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பிடும் போது கடை அடிப்படையிலான லாபத்தை கணக்கிடுவது முக்கியமான அளவுகோளாக முதலீட்டு சந்தையில் பார்க்கப்படுகிறது.
டிமார்ட் தற்போது 503 கடைகள் உடன் ஒரு கடைக்கு தலா 6-7 கோடி ரூபாய் லாபத்துடன் இயங்கி வருகிறது, இதுவே ரீலையன்ஸ் ரீடைல் ஒரு கடைக்கு தலா 1 கோடி ரூபாய்க்கும் குறைவான லாபத்தில் இயங்கி வருகிறது.
இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் 10 நிமிட டெலிவரி, முதல் பெரிய வர்த்தக மாடல்கள் வரையில் அனைத்தையும் ஓரம்கட்டியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் டிமார்ட்-ன் உரிமையாளரான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவன பங்குகள் 1.26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவே ரிலையன்ஸ் ரீடைல் உரிமையாளரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 16.91 சதவீதம் சரிந்துள்ளது. பிளிங்கிட் உரிமையாளரான எட்டர்னல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 14.98 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இன்ஸ்டாமார்ட் உரிமையாளரான ஸ்விக்கி பங்கு மதிப்பு 30.55 சதவீதமும் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications

