இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் அடுத்தடுத்து காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில் இந்திய ரீடைல் சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் டிமார்ட் கடைகளின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இந்திய ரீடைல் சந்தை வேமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் டிமார்ட் தொடர்ந்து தனது வர்த்தகக் கிளைகளை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ஆம் தர நகரங்களில் அதிகப்படியான கடைகளைத் திறந்து வருகிறது.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
செப்டம்பர் காலாண்டு முடிவில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் வரிக்கு பின்பு சுமார் 685 கோடி ரூபாய் அளவிலான தொகையை லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 418 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜூன் காலாண்டின் 642 கோடி ரூபாய் லாபத்தை ஒப்பிடுகையில் 6.6 சதவீதம் அதிகமாகும்.
வருவாய்
இதே காலக்கட்டத்தில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டின் 7789 கோடி ரூபாய் உடன் ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிகரித்து 10,638 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜூன் காலாண்டின் 10,038 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.
டிமார்ட்
வழக்கம் போல் இந்தக் காலாண்டும் டிமார்ட் கடைகளில் ஆடை மற்றும் பிற வீட்டுப் பொருட்களைக் காட்டிலும், FMCG மற்றும் அடிப்படையாகத் தேவைப்படும் பொருட்களின் விற்பனை மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் FMCG அல்லாத பொருட்களின் விற்பனை அளவு இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் நிலை
டிமார்ட் கடைகளின் வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினர் மிடில்கிளாஸ் மக்கள் தான், FMCG அல்லாத பொருட்களின் விற்பனை இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை அடையாதது மூலம் இந்திய மக்களின் நிலையைக் காண முடிகிறது. உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் மக்களின் நிலை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு வரவில்லை.
முதல் அரையாண்டு ரிப்போர்ட்
மேலும் 2023 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் சுமார் 20,676 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டில் 12,972 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. EBITDA மார்ஜின் அளவு 6.9 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications