இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் கடைகளில் ஒன்றாக விளங்கும் DMart பிராண்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் டிசம்பர் 31, 2022 உடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது.
டிசம்பர் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிகர லாப அளவு 9 சதவீதம் அதிகரித்து 641 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 586 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 7 சதவீதம் உயர்ந்து 589 கோடி ரூபாயாக உள்ளது.

இதே காலக்கட்டத்தில் அதன் ஒருங்கிணைந்த வருவாய் 25.5 சதவீதம் உயர்ந்து 11,569 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் நிறுவனத்தின் standalone revenue கடந்த ஆண்டு இதே காலாண்டை ஒப்பிடுகையில் 9,065 கோடி ரூபாய் அளவில் இருந்து 25 சதவீதம் அதிகரித்து 11,305 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகைக்கு முந்தைய வருவாய் ஆகியவற்றைக் கழித்த பின்பு 2022 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் EBITDA வருவாய் 974 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 868 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
EBITDA மார்ஜின் அளவு 2022 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 9.6 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாகச் சரிந்துள்ளது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 1.28 சதவீதம் குறைந்து 3,862.20 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications