இந்தியாவின் முன்னணி ரீடைல் விற்பனை நிறுவனமான டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் இன்று மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இந்திய ரீடைல் சந்தையில் கடந்த 6 மாதம் பெரிய அளவிலான தடுமாற்றம் அடைந்தாலும் தொடர்ந்து நிலையிலான வர்த்தகத்தை பெற்று வருகிறது.
இதில் முக்கிய பங்கு வகிக்கும் டிமார்ட் மார்ச் காலாண்டு வர்த்தகம் எப்படி இருந்தது..? முதலீட்டாளர்களை மகிழ்வித்ததா..?

இந்தியாவின் பிரபலமான பங்குசந்தை முதலீட்டாளரும், முன்னணி ரீடைல் விற்பனை நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ன் தலைவருமான ராதாகிஷன் தமனி 16.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சர்வதேச பில்லியனர்கள் பட்டியிலில் 101 வது இடத்தில் உள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார், இவருக்கு முன் ஜின்டால் குழுமத்தின் சாவித்ரி ஜின்டால் 17.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.
ராதாகிஷன் தமனி தலைமையிலான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் மார்ச் காலாண்டில் வருவாய் அளவு 21 சதவீதம் அதிகரித்து சுமார் 10,337 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ன் வருவாய் 8,606 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு நாளுக்கு 114 .85 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றுள்ளது.
மார்ச் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ன் லாப அளவு 8 சதவீதம் உயர்ந்து 505.21 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த நிதியாண்டின் ஆண்டின் இதே மார்ச் காலாண்டில் 466.35 கோடி ரூபாயை மட்டுமே லாபமாக பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு நாளுக்கு 5.6 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது.
ஆனால் டிசம்பர் காலாண்டின் 11,304.58 கோடி ரூபாய் வருவாயும், 641.07 கோடி ரூபாய் லாபத்தை ஒப்பிடுகையில் மார்ச் காலாண்டில் சரிந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ன் லாபம் அதிகரிக்க முக்கியமான காரணம் இது இந்திய மக்களின் முக்கியமான பண்டிகை காலம் என்பதால் உணவு பொருட்கள் முதல் அனைத்து பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். இதன் வாயிலாக டிசம்பர் காலாண்டில் லாபம், வருவாய் அதிகரித்துள்ளது.

அனைத்திற்கும் முக்கியமாக கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ன் செலவுகள் 7999.03 கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில் 2023 மார்ச் காலாண்டில் 9,709.20 கோடி ரூபாயாக இருந்தது. இதனால் நிறுவனத்தின் மார்ஜின் அளவு 8.6 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக குறைந்துள்ளது.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ஐ ராதாகிஷன் தமனி உருவாக்கியது, முதல் கடையை 2002ல் மும்பையின் போவாய் பகுதியில் திறக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 324 பகுதிகளில் தனது ரீடைல் கடைகளை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications