இந்தியாவின் முன்னணி ரீடைல் நிறுவனமாக இருக்கும் டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தனது வர்த்தகத்தை நாட்டின் 2வது மற்றும் 3வது தர நகரங்களுக்கு வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது.
இதனால் டிமார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் குறைந்த முதலீட்டில் அதிகப்படியான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்று வருகிறது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் டிமார்ட் தலைவர் ராதாகிஷன் தமனி மற்றும் அவரது குடும்பம் இணைந்து ஒரே நேரத்தில், ஒரே கட்டத்தில் சுமார் 28 ஆடம்பர அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிக் குவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட்
இந்தச் செய்தி ஒட்டுமொத்த வர்த்தக உலகையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது, சமீப காலமாக ஆடம்பர வீடுகளின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பது உண்மை தான் ஆனால் இதுவரையில் யாரும் ஓரே நேரத்தில் 28 ஆடம்பர வீடுகளை வாங்கவில்லை.
24 ஆடம்பர அப்பார்ட்மென்ட்
மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்திருக்கும் சூப்பர் பிரீமியம் திட்டத்தில் ராதாகிஷன் தமனி மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 1,238 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளனர். இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டீல் ஆக இருக்கும் என அறியப்பட்டு உள்ளது.
த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்
மும்பையின் வோர்லி பகுதியில் டாக்டர் அன்னி பெசன்ட் சாலையில் சீ-வியூ அப்பார்ட்மெண்ட் ஆக இருக்கும் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் என்னும் பிரம்மாண்ட ரியல் எஸ்டேட் திட்டத்தில் ராதாகிஷன் தமனி மற்றும் அவரது குடும்பம் இணைந்து 28 ஆடம்பர அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கியுள்ளனர்.
சஹானா குழுமம்
மேலும் இந்த 28 ஆடம்பர அப்பார்ட்மென்ட்-ஐ சஹானா குழுமத்திடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் என்னும் பிரம்மாண்ட ரியல் எஸ்டேட் திட்டத்தைச் சஹானா குழுமம் ஓபராய் ரியாலிட்டியுடன் கூட்டணி அமைத்தது.
Ritz-Carlton ஹோட்டல்
இந்த த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் திட்டத்தில் 2 டவர்கள் உள்ளது, இதில் ஒன்று பிரபல ஹோட்டல் நிறுவனமான Ritz-Carlton-ன் ஹோட்டல் வர உள்ளது. மற்றொன்று ஆடம்பர வீடுகள், இதையும் Ritz-Carlton நிர்வாகம் தான்நிர்வகிக்க உள்ளது.
ஓபராய் ரியாலிட்டி
சஹானா குழுமம் ஓபராய் ரியாலிட்டி கூட்டணியில் த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் திட்டம் அமையப்பட்டு உள்ள காரணத்தால், இந்த ப்ராஜெக்ட்-ல் சுமார் 63 அப்பார்ட்மென்ட்-ஐ சஹானா குழுமம், ஓபராய் ரியாலிட்டி-க்கு 3400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
மலபார் ஹில் பகுதி
டிமார்ட் தலைவர் ராதாகிஷன் தமனி மற்றும் அவரது குடும்பம் ஏப்ரல் 2021ல் தென் மும்பையில் பல பில்லியனர்கள் பணக்காரர்கள் வசிக்கும் மலபார் ஹில் பகுதியில் பிரம்மாண்டமான வீட்டை 1001 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications