இந்தியாவின் முன்னணி பங்கு முதலீட்டாளர் மற்றும் டிமார்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ராதாகிஷன் தமனி தனது ரீடைல் வர்த்தகத்தை ஜியோமார்ட், டாடா உடன் போட்டிப்போடும் வகையில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் புதிதாக ஒரு நிறுவனத்தில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து உள்ளார்.
இந்தப் புதிய முதலீட்டின் மூலம் சந்தையில் ராதாகிஷன் தமனி மீது இருந்து நன்மதிப்புக் கணிசமாகச் சரிந்துள்ளது. சுருங்கச் சொன்னால் ராதாகிஷன் தமனிக்கு லாபம் தான் முக்கியமாக உள்ளது, மக்கள் மீது அக்கரை இல்லை என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது.
ராதாகிஷன் தமனி
ரீடைல் துறை ராதாகிஷன் தமனி மக்களுக்கு மிகவும் குறைவான விலையில் பொருட்களை அளிக்கும் காரணத்தால் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராதாகிஷன் தமனி சிகரெட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ்
ராதாகிஷன் தமனி மற்றும் அவருடைய முதலீட்டு நிறுவனங்களான பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் டிரைவ் டிரேடிங் அண்ட் ரிசார்ட்ஸ் உடன் இணைந்து சிகரெட் தயாரிக்கும் நிறுவனமான விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சுமார் 32.3 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
32.3 சதவீத பங்குகள்
ராதாகிஷன் தமனி மற்றும் அவரது முதலீட்டு நிறுவனங்கள் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் செப்டம்பர் 30, 2019ல் 26 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில், ஜூன் 30, 2021ல் இதன் அளவு 30.2 சதவீதமாக உயர்ந்து தற்போது 32.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த 32.3 சதவீத பங்குகளின் மொத்த மதிப்பு 1,729 கோடி ரூபாய்.
ஈஎஸ்ஜி பிரச்சனை
இந்திய சந்தையில் ஈஎஸ்ஜி (environmental, social மற்றும் corporate governance) காரணமாக விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் உட்படப் பல சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையிலும் ராதாகிஷன் தமனி இந்நிறுவனத்தின் முதலீடு செய்துள்ளார்.
விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்
விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று 3.32 சதவீதம் வளர்ச்சி அடைந்து 3,745.90 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் இதன் மதிப்பு 8.39 சதவீதம் அதிகரித்துள்ளது, ஒரு மாதத்தில் 10.29 சதவீதம், 6 மாதத்தில் 14.83 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications