சென்னை நிறுவனத்தை வாங்கும் DMART.. சத்தமில்லாமல் சாதித்த ராதாகிஷன் தமனி..!

இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் விற்பனை நிறுவனமான டிமார்ட் கடந்த சில காலாண்டுகளாக தனது வர்த்தகத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் அதன் உரிமையாளர் வர்த்தகத்தை பிற முக்கிய பிரிவுகளில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார். இத்திட்டத்தின் படி மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், ஆடைகள் தாண்டி மக்கள் அதிகமாக வாங்கும் பொருட்கள் என்றால் அழகுசாதன பொருட்கள் தான்.

இந்க நிலையில் டிமார்ட் பிராண்டின் உரிமையாளரும் பில்லியனருமான ராதாகிஷன் தமனி பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கும் பியூட்டி மற்றும் பர்சனல் கேர் பிராண்டாக இருக்கும் Health and Glow நிறுவனத்தை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைப்பற்றல் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அடுத்த வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை நிறுவனத்தை வாங்கும் DMART.. சத்தமில்லாமல் சாதித்த ராதாகிஷன் தமனி..!

ராதாகிஷன் தமனி தனது முதலீடுகளை நீண்ட கால அடிப்படையில் செய்யும் வழக்கத்தை கொண்டும் இருக்கும் காரணத்தால் பெரிய பிராண்டுகளை வாங்காமல் சிறிய பிராண்டுகளை வாங்கி அதை தனது வர்த்தக மாடலுக்குள் மாற்றியும், இணைக்கும் வழக்கத்தை கொண்டவர். இதேபோல் ராதாகிஷன் தமனிக்கு ஒரு பிஸ்னஸ்-ஐ கைப்பற்றிய பின்பு அதை விற்பனை செய்யும் வழக்கமும் இல்லை என்பதால் Health and Glow-வின் 2வது இன்னிங்க்ஸ் ஆக இதை பார்க்கப்படுகிறது.

Health and Glow நிறுவனத்தை ராஜன் ரஹேஜா மற்றும் ஹேமேந்திர கோத்தாரி ஆகியோரிடம் இருந்து சுமார் 700 முதல் 750 கோடி ரூபாய்க்கு ராதாகிஷன் தமனி வாங்கியிருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக 2015ல் ராதாகிஷன் தமனி Bombay Swadeshi Stores-ஐ சுமார் 42 கோடி ரூபாய்க்கு வாங்கினார், இதன் பின்பு இந்தியா சிமெண்ட் நிறுவனம் உட்பட பல நிறுவனத்தில் செய்யப்படட் முதலீடுகள் அனைத்தும் பங்கு முதலீடுகள் தான்.

1997 ஆம் ஆண்டு Health and Glow நிறுவனம் சென்னையில் ஒரேயொரு கடை உடன் உருவானது, இன்று பெங்களூரு, மங்களூரு, புனே, மும்பை, கொச்சின், கொல்கத்தா, போபால், புவனேஷ்வர் மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் 175 கடைகள் உடன் இயங்கி வருகிறது. 2023 ஆம் நிதியாண்டில் சுமார் 370 கோடி ரூபாய் விற்பனை உடன் 15 சதவீத EBITDA மார்ஜின் கொண்டுள்ளது.

சென்னை நிறுவனத்தை வாங்கும் DMART.. சத்தமில்லாமல் சாதித்த ராதாகிஷன் தமனி..!

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்த வரும் முக்கியமான துறையாக பியூட்டி மற்றும் பர்சனல் கேர் பிரிவு இருக்கும் வேளையில் 2023 முடிவில் இத்துறையின் சந்தை 18.3 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்படுகிறது. இத்துறையில் தற்போது NYKAA போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+