இந்திய மக்களின் முக்கிய விருப்பமாக இருக்கும் ரீடைல் பிராண்டான டிமார்ட் கடைகளில் மாதம் துவங்கினால் போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். காரணம் எந்த இடத்திலும் கிடைக்காத வகையில் மிகவும் குறைவான விலையில் வீட்டில் தனசரி பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் கிடைக்கிறது.
இந்தியாவின் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் தனது கடைகளை அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து வரும் வேளையில் டிமார்ட் கடைகளின் வளர்ச்சி மற்றும் லாப அளவீடுகளை நிலைநாட்டுவதில் பெரிய சவால்களை எதிர்கொள்கிறது ராதாகிஷன் தமனி நிர்வாகம். டிமார்ட் கடைகள் தற்போது தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம் ஆகிய முக்கிய நகரங்களை தாண்டி பல சிறிய நகரங்களிலும் விரிவாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிமார்ட் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் லாப அளவீடுகளை நிலைநாட்டுவதில் ஏன் பிரச்சனை என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் ஈகாமர்ஸ், டிஜிட்டல் வர்த்தகம் என மாறிவரும் வேளையில் டிமார்ட்-ம் கொரோனா தொற்று காலத்தின் மத்தியில் ஆப் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கியது.
டிமார்ட் கடைகளின் வர்த்தக மாடல் கிட்டத்தட்ட நம்ம ஊர் மளிகை கடைகள் போல தான், ஆனால் ரொம்ப பெருசு, இதேபோல் விலையும் குறைவாக இருக்கும். இதனால் நேரில் வரும் மக்கள் ஒரு பொருள் வாங்க வேண்டிய இடத்தில் குறைந்தது 5 பொருள் வாங்க தூண்டும் இதற்கு ஈடாக Buy1 Get1 ஆஃபர் முதல் பல தள்ளுபடிகளை வழங்குகிறது.
ஆனால் தற்போது ஆப் மூலம் அதிகப்படியாக விற்பனையாகும் காரணத்தால் அதன் அடிப்படை வர்த்தக மாடல் பாதிக்கப்பட்டு வர்த்தக வளர்ச்சி மற்றும் லாப அளவீடுகளை நிலைநாட்ட முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.
ஜூன் 2023 காலாண்டில் டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் 11,584 கோடி ரூபாய் வருமானத்தை பெற்று 18 சதவீத வருடாந்திர வளர்ச்சியை எட்டியுள்ளது. இக்காலாண்டில் 3 புதிய கடைகளை திறந்துள்ள காரணத்தால் மொத்த ரீடைல் கடைகளின் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் வளர்ச்சி மற்றும் லாப அளவீடுகளை நிலைநாட்ட முடியாததும், அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி same-store sales growth (SSSG) ஆய்வில் டிமார்ட் மந்தமான அளவீட்டை பெற்றுள்ளது. இது டிமார்ட் பங்குகளின் விலை உயர்வுக்கு குறுகிய கால தடையாக உள்ளது.
மோர்கன் ஸ்டான்லி ஆய்வில் டிமார்ட் கடைகளின் same-store sales growth (SSSG) ஆய்வில் வெறும் 7 சதவீதம் என சந்தை கணிப்புகளை காட்டிலும் குறைவான கணிப்பை அறிவித்துள்ளது. டிமார்ட் கடைகளின் வர்த்தகத்தில் சராசரியாக 77 சதவீதம் மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் தான்.
மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் வேளையில், தற்போது பணவீக்கம் குறைந்து வருவதால் FMCG பிரிவில் விற்பனை மதிப்பு குறையும், இதனால் டிமார்ட் மளிகை பொருட்களின் விற்பனை மதிப்பு 4.14 சதவீதம் 2024 ஆம் ஆண்டில் குறையும் என மோர்கன் ஸ்டான்லி தனது SSSG ஆய்வில் கூறுகிறது.
இதன் எதிரொலியாக டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் பங்குகள் இன்று 1 சதவீதம் சரிந்து 3,817.20 ரூபாயாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் பங்குகள் 6.27 சதவீதம் சரிந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து விரிவாக்கம் செய்தாலும் பணவீக்க சரிவால் இப்படியொரு பிரச்சனையை எதிர்கொள்கிறது டிமார்ட்.
இதை சரி செய்ய மாற்று விற்பனை மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்கும் வழிகளை ஏதேனும் கண்டுப்பிடித்தால் எளிதாக மீண்டு வர முடியும். ஏற்கனவே டிமார்ட் தனது ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் மொத்த விற்பனையை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடைக்காரர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிக்கொள்ள முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications