இந்தியாவில் வெறும் 336 ரீடைல் கடைகளை மட்டுமே வைத்திருந்தாலும் இந்திய ரீடைல் சந்தையில் தனி அடையாளத்தையும், வேறு எந்த நிறுவனமும் பெற்றிடாத வகையில் அதிகப்படியான வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற்றுள்ளது டிமார்ட் பிராண்ட். இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டு முடிந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து அனைத்து நிறுவனங்களும் காலாண்டு முடிவுகளை வெளியிட துவங்கியுள்ளன.
செப்டம்பர் காலாண்டில் டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் சுமார் 18.5 சதவீத அதிக வருவாய் பெற்று அசத்தியிருந்தாலும், லாபத்தில் முதலீட்டாளர்களை சர்ப்ரைஸ் செய்ய கோட்டை விட்டு உள்ளது என்றால் மிகையில்லை.

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 12,307.72 கோடி ரூபாய் அளவிலான வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய காலாண்டில் 10.384.66 கோடி ரூபாயாக இருந்த நிலையில், வருவாய் சுமார் 18.51 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் காலாண்டில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் தனது ஆப்ரேஷன்ஸ் மூலம் சுமார் 7,649.64 கோடி ரூபாய் மதிப்பிலான வருவாயை பெற்றுள்ளது. அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவன பங்குகள் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 8.63 சதவீதம் சரிந்துள்ளது.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் 336 கடைகளை வைத்துள்ளது, பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் 2ஆம், 3ஆம் தர நகரங்களிலும் கடைகளை திறந்து வருகிறது டிமார்ட். சமீபத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் டிமார்ட் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் சுமார் 4.74 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 3898.90 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு அளவில் பார்க்கும் போது 4.38 சதவீத சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது. அடுத்த 2 மாதம் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் வர்த்தகத்திற்கு ராஜயோகம் என்பதால் சிறப்பான வர்த்தக வளர்ச்சி பதிவாக வாய்ப்புகள் அதிகம்.


Click it and Unblock the Notifications