தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த வேளையில் இன்று காலமானார். மக்களின் பார்வைக்காவும், அஞ்சலி செலுத்துவதற்காகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக பொதுமாக்கள் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது, இதனால் கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
திரையுலகில் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து பெரும் வெற்றி அடைந்தவர்கள் பட்டியலில் எம்ஜிஆர்-க்கு பின்பு விஜயகாந்த் தான், விஜயகாந்த் அவர்களுக்கு நிகராக இதுவரையில் எந்தொரு நடிகரும் வாக்கு வங்கியை பெறவில்லை. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர்.

விஜயகாந்த் மரணம் பலருக்கும் கண்ணீர் வரவழைத்துள்ளது, அவரின் தீவிர ரசிகர்கள் ஒருபக்கம் இருக்க, மறுபுறம் அவரால் பலன் அடைந்தவர்கள் என அவரின் வீட்டின் முன் மக்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது.
விஜயகாந்த் பிறருக்கு உணவளிப்பதில் பெரு மகிழ்ச்சி கொண்டு இருந்தார் என்பது மறக்க முடியாத ஒன்று, இதேபோல் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பிசியுடன் இருக்கக் கூடாது என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்தார். இதனால் தன்னைச் சந்திக்க வருபவர்களை முதலில் சாப்பிட சொல்லிவிட்டு, அவர்கள் சாப்பிட்ட பின்பு தான் விஷயத்தைக் கேட்பாராம்.
10 வகுப்பு வரை மட்டுமே படித்த விஜய்காந்த்-க்கு கிட்டத்தட்ட 53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பில் பெரும் பகுதி ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம், கேப்டன் பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் வாயிலாக உள்ளது.
மேலும் விஜயகாந்த் தன்னுடைய எதிர்காலத் தேவைக்காகத் தபால் நிலைய திட்டங்கள், NSS போன்ற அரசு முதலீட்டு திட்டத்தின் வாயிலாகச் சுமார் 2 கோடி ரூபாய் முதலீடு செய்து சேமித்து வைத்துள்ளார். விஜயகாந்த் பெரிய வாகன பிரியர் என்றால் மிகையில்லை.
விஜயகாந்த் தான் நடித்த படத்திலும் பெரிய பெரிய கார்களைப் பயன்படுத்துவது வழக்கம், அந்த வகையில் அவரிடம் பென்ஸ் கார், போர்டு எண்டேவர், ஹோண்டா கார், வால்வோ கார், ராயல் என்ஃபீல்ட் பைக், 2 டெம்போ டிராவலர் ஆகியவை உள்ளது.
மேலும் விஜயகாந்த் 2016 தேர்தலில் போட்டியிடும் போது இவரது குடும்பத்தில் 2.35 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி இருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதேபோல் விவசாய நிலமாக 150 நிலத்தையும், விவசாயம் அல்லாத 11 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications