சென்னை: தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றிக்கொள்ளும் வகையில் சட்டத் திருத்தத்தை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ம் தேதி சட்டமன்றத்தில் இதற்காக மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகள் வர இருப்பதாகவும் எனவே முதலீட்டாளர்கள் சில நெகிழ்வு தன்மைகளை எதிர்பார்க்கிறார்கள் என்றும் அரசு தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று(ஏப்.21) இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரமாக மாற்ற அனுமதிக்கப்படுகிறது. அதேபோல இது குறிப்பிட்ட சில தொழிற்சாலைகளுக்கு மட்டும்தான் என்று சொன்னாலும் காலப்போக்கில் இது அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. மேலும் தற்போது 3 ஷிப்டாக இருக்கும் வேலை நேரம் இரண்டு ஷிப்டாக குறைக்கப்பட்டு மீதமுள்ள தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். இது வேலையின்மையை மேலும் அதிரிக்கும் என்றும் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
இது மட்டுமல்லாமல் ஓடி செய்து வருமானம் ஈட்டும் முறையும் முற்றிலும் ஒழித்துக்கட்டப்படும். மறுபுறம் மனித குலத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை இந்த சட்டத்திருத்தம் ஏற்படுத்தும். இன்னும் 5-6 ஆண்டுகள் கடந்து பார்த்தால் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்நாட்கள் சில ஆண்டுகள் குறையும். 8 மணி நேரம் வேலை என்பது போராடி பெற்ற உரிமையாகும். இந்த உரிமையை இழக்க தொழிலாளர்கள் ஒருபோதும் தயாராக இருக்கமாட்டார்கள் என்றும் அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவரான விஜயகாந்த் இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது, "8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பணி நேரத்தை தற்போது நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன? 12 மணி நேரம் பணி என்பது ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்கு வேலை பளுவை அதிகரிப்பதோடு, அவர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். மேலும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே குழப்பத்தை உண்டாக்கும். எனவே 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் பழைய நடைமுறையே தொடர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே இது போன்ற ஒரு மசோதவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள நிலையில் அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதில் திமுகவும் ஒன்று. இப்படி இருக்கையில் அதே பாணியில் மற்றொரு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். 8 மணி நேரம் போராட்டத்தின் விளைவாகதான் கிடைத்தது. இதனைதான் மே தின கொண்டாட்டங்கள் குறிப்பிடுகின்றன. தேசிய அளவில் தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது.
மே தினத்திற்கு ஊதியத்துடன் விடுமுறை அளித்ததும் கருணாநிதி ஆட்சிதான். இப்படி இருக்கையில் அவரது வழியை பின்பற்றுவதாக கூறும் தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் உழைப்பு நேரத்தை உயர்த்துவது ஏன் என்று கூட்டணி கட்சிகளே கேள்வியை எழுப்ப தொடங்கியுள்ளன. வளர்ந்த நாடுகளில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாக குறைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில் வளரும் மாநிலமான தமிழ்நாட்டில் வேலை நேரத்தை அதிகரிக்க முயன்றிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications