ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொழில் ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரம் ஓசூர். இங்கே சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலையம் அமைக்க இரண்டு இடங்களை தேர்வு செய்து அனுப்பி வைத்த நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தையே நிராகரித்துவிட்டது. பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அமைக்கும் போது 2033ஆம் ஆண்டு வரை 150 கிலோமீட்டர் தொலைவுக்குள் புதிதாக எந்த ஒரு விமான நிலையமும் அமைக்க கூடாது என மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனை சுட்டிக்காட்டி மத்திய அரசு ஓசூர் விமான நிலைய திட்டத்துக்கு அனுமதி மறுக்கிறது. இது ஒரு அநீதி என திமுக குற்றம்சாட்டியுள்ளது. திமுக எம்பி வில்சன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில், ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தை எந்த ஒரு அர்த்தமுள்ள ஆலோசனையும் இல்லாமல் உறுதியான நியாயப்படுத்தல் இல்லாமல் மத்திய அரசு நிராகரித்துள்ளது என கூறியிருக்கிறார்.
ஓசூர் விமான நிலைய திட்டம் என்பது ஒரு சாதாரண கோரிக்கை அல்ல இது ஓசூர் நகரத்தின் வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டம் என சுட்டிக்காட்டி இருக்கிறார். ஓசூர் ஒரு முக்கிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி மையம், இது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது, வேலை வாய்ப்பை உருவாக்குகிறது முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இங்கு ஒரு விமான நிலையம் அமைப்பது வர்த்தகத்தை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டி இருக்கிறார். பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இடையிலான ஒப்பந்தம் ஒரு சட்ட விரோத ஒப்பந்தம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் அதன் மக்களின் உரிமைகளை தியாகம் செய்யும் வகையில் தனியார் நிறுவனங்களோடு மத்திய அரசு எவ்வாறு இத்தகைய வணிக ஒப்பந்தங்களில் ஈடுபட முடியும் என கேள்வி எழுப்பி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன் என கூறியுள்ளார், நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினையை எழுப்பி இருக்கிறேன் என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
பொது நலனுக்கு எதிராகவும், வளர்ச்சிக்கு எதிராகவும் மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கக் கூடிய வகையிலும் இருக்கும் இது போன்ற ஒப்பந்தங்கள் செல்லாது எனக் கூறியிருக்கும் அவர் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இரட்டை நிலைப்பாடு இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இதே ஒப்பந்தம் மைசூருக்கும் ஹாசனுக்கும் ஏன் பொருந்தவில்லை , தமிழ்நாட்டுக்கு எதிரான இந்த பாகுபாடு மற்றும் அநீதிக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் எந்த பதிலும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.
நொய்டா விமான நிலையம் டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தான் அமைக்கப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டும் அவர் லண்டனில் ஆறு விமான நிலையங்கள் ஒரே நகருக்குள் செயல்படுகின்றன, நியூயார்க்கில் இதே போல அருகருகிலேயே சர்வதேச விமான நிலையங்கள் இயங்குகின்றன ஒரு விமான நிலையம் அமைக்கப்படுவது மற்றொரு விமான நிலையத்துக்கு அச்சுறுத்தலாக ஒருபோதும் மாறாது என கூறியிருக்கிறார்.
விமான போக்குவரத்து துறையில் தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது எனக் கூறியிருக்கிறார். அனைவரும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விமான நிலையம் அமைக்க தகுதியான ஒரு நகரம் ஓசூர் என குறிப்பிட்டு இருக்கும் திமுக எம்பி வில்சன், தமிழ்நாட்டிற்கு நீதி தேவை தமிழ்நாட்டுக்கு எதிராக பாகுபாடு காட்டாதீர்கள் என கேட்டு கொண்டுள்ளார்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications