மார்ச் 31ஆம் தேதி 2023-24ஆம் நிதியாண்டின் கடைசி நாள், வழக்கமாக ஆண்டுதோறும் நிதியாண்டின் இறுதி நாளில் வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் வழக்கம் போலச் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
வெள்ளிக்கிழமை புனித வெள்ளி காரணமாக வங்கிகள் விடுமுறையை எதிர்கொண்ட நிலையில், மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வங்கிகள் செயல்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மார்ச் 31ஆம் தேதி வழக்கம் போல வங்கிகள் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக வருமான வரித் துறை சார்ந்த செயல்கள் மற்றும் அரசின் ரசீதுகளை கிளியர் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு இருக்கும் அனைத்து வங்கிகளும் கட்டாயமாகவும், முழுமையாகவும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஏப்ரல் 1 ஆம் தேதி அதாவது இன்று என்ன கதை..?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வங்கிகளின் வருடாந்திர கணக்குகளை மூடுவதற்காக திங்கள் கிழமை, ஏப்ரல் 1, 2024 இன்று பல மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் ஞாயிறுகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட மொத்தம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. இந்திய ரிசர்வ் வங்கி விடுமுறைகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது: negotiable Instruments Act விடுமுறைகள், Real Time Gross Settlement விடுமுறைகள் மற்றும் வங்கி கணக்கு முடிவு விடுமுறைகள்.
ஏப்ரல் 1, 2024 இன்று வங்கி விடுமுறை என்பது வங்கி கணக்கு முடிவு விடுமுறைகள் பிரிவைச் சார்ந்தது. வங்கிகளின் ஆண்டு கணக்குகளை முடிக்க வசதியாக, மிசோரம், சண்டிகர், சிக்கிம், மேற்கு வங்காளம், இமாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா தவிர பிற பெரும்பான்மையான மாநிலங்களில் நாளை வங்கிகள் இயங்காது.
இந்த விடுமுறை நாளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது அல்லது டெபாசிட் செய்வது சாத்தியமில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
"ஆண்டு கணக்கு முடிவு நடவடிக்கைகள் காரணமாக, 2024 ஏப்ரல் 1, திங்கள் கிழமை அன்று ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கும் / டெபாசிட் செய்வதற்குமான வசதி கிடைக்காது. இந்த வசதி 2024 ஏப்ரல் 2, செவ்வாய் (செவ்வாய்க்கிழமை) அன்று மீண்டும் தொடங்கும்" என்று ரிசர்வ் வங்கி 2024 மார்ச் 28 ஆம் தேதியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
எனவே, நாளை (ஏப்ரல் 1) வங்கி பரிவர்த்தனைக்குச் செல்லும் பொதுமக்கள் இந்த முக்கிய தகவலை கவனத்தில் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications