டெல்லி: கொரோனா வைரஸ் உலகத்தின் வல்லரசு நாடான அமெரிக்கா தொடங்கி, அதிக மக்கள் தொகை கொண்ட சீனா வரை பலரையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்றால் கொரோனா வைரஸ் பற்றி பரவும் பயம்.
இதை சாப்பிட்டால் கொரோனா வந்துவிடுமா.. அதை தொட்டால் கொரோனா வந்து விடுமோ என பலரும் பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இறைச்சி
அதில் மிக முக்கியமான விஷயம் இறைச்சி. சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சிகளைச் சாப்பிட்டால் கொரோனா பரவுமோ என்கிற அச்சம் பலருக்கும் இருக்கிறது. இந்த அச்சம் வெறும் பேசசு அளவிலோ அல்லது வாட்ஸப் ஃபார்வர்ட்களாக மட்டுமே இருந்து இருந்தால் பிரச்சனை இல்லை. இப்போது நேரடியாக இறைச்சி வியாபாரம் அடி வாங்கும் அளவுக்குப் போய் இருக்கிறது.
வியாபாரம்
இந்த கொரோனா வைரஸ் பயத்திலேயே, சிக்கனுக்கான தேவையும் கணிசமாக குறைந்து இருக்கிறதாம். ஒரு கிலோ சிக்கன் விலை சுமாராக 10 - 30 ரூபாய் சரிந்து இருக்கிறதாம். அதோடு கடந்த மார்ச் 02, 2020 அன்று கோழி வளர்ப்பவர்கள் அரசிடம் 1,750 கோடி ரூபாய்க்கு நிவாரண நிதியை கேட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா பயத்தால் சிக்கன் விலை சரிவதைக் குறித்து அனைத்து இந்திய கோழி வளர்ப்பாளர்கள் சங்கம், அரசிடம் விளக்கி இருக்கிறார்களாம்.
FSSAI
சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சிகளைச் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவுமா என்கிற கேள்விக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)-ன் தலைவர், ஜி எஸ் ஜி ஐய்யங்கார், கடந்த வியாழக்கிழமை அன்று, அஸ்ஸோசெம் (Assocham) கூட்டத்தில் பதில் சொல்லி இருக்கிறார்.
என்ன பதில்
அடிப்படையில் கொரோனா வைரஸ் ஒரு விலங்கு வைரஸ் தான். அது எப்படி மனிதர்களுக்கு பரவியthu என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கட்டும். நம் நாடு அதிக வெப்பம் இருக்கும் நாடு. தட்ப வெப்பநிலை 35 - 36 டிகிரியைத் தாண்டினால் வைரஸால் உயிர் வாழ முடியாது எனச் சொல்லி இருக்கிறார்.
இறைச்சி சாப்பிட்டால்
அதோடு "சிக்கன், மட்டன், மீன் (கடல் உணவுகள்) போன்ற இறைச்சிகளைச் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்கிற தவறான புரிதல் பரவலாக இருக்கிறது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இறைச்சி சாப்பிட்டால் கொரோனா பரவும் என இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை" என தன் தரப்பில் இருந்து தெளிவுபடுத்தி இருக்கிறார் ஜி எஸ் ஜி ஐய்யங்கார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications