அமெரிக்க இளைஞர்களின் கனவுகளை பறிக்கிறார்களா இந்தியர்கள்? – அமெரிக்க அரசின் வீடியோவால் சர்ச்சை!!

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றார். டிரம்ப் தன்னுடைய தேர்தல் பரப்புரையில் இருந்தே அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என கூறி வந்தார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தன்னுடைய அரசு மேற்கொள்ளும் என கூறினார்.

டிரம்ப் அதிபராக தேர்வானது தொடங்கி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வருவது கல்வி பயில்வது மற்றும் வேலை செய்வது உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் இருக்கிறார். குறிப்பாக பெரும்பாலான அமெரிக்க டெக் நிறுவனங்கள் எல்லாம் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவதற்கு அதிகமாக பயன்படுத்துவது ஹெச்1பி விசா தான்.

அமெரிக்க இளைஞர்களின் கனவுகளை பறிக்கிறார்களா இந்தியர்கள்? – அமெரிக்க அரசின் வீடியோவால் சர்ச்சை!!

இந்தியாவை சேர்ந்த டெக்கிகள் தான் அதிக அளவில் ஹெச்1பி விசாவில் தான் அமெரிக்கா சென்று வேலை செய்கின்றனர். கூகுளின் சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் ஹெச்1பி விசாவில் தான் அமெரிக்கா சென்றனர். இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்கா வரும் வெளிநாட்டவர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக ஒரு மனநிலையை உருவாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில் தான் ஹெச்1பி விசா திட்டத்தில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது . இத்தகைய சூழலில் அமெரிக்க அரசின் தொழிலாளர் துறை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு வீடியோ பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் ஹெச்1பி விசாவை பலரும் தவறாக பயன்படுத்தி வெளிநாட்டவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்து வேலை செய்ய வைத்தனர் . இதனால் அமெரிக்க இளைஞர்களின் கனவே களவாடப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஹெச்1பி விசாவை நிறுவனங்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தி இருக்கிறது , அமெரிக்க கனவு மீண்டும் அமெரிக்க மக்களிடமே ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் எந்தெந்த நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஹெச்1பி விசாவை பெற்றிருக்கிறார்கள் என்ற தகவலும் இடம்பெற்றிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி 72% ஹெச்1பி விசா இந்தியர்களுக்கு தான் சென்று இருக்கிறது. அப்படி என்றால் இந்தியர்கள் தான் அமெரிக்கர்களின் கனவை பறித்து கொண்டார்களா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

அமெரிக்க தொழிலாளர் துறை Project Firewall என்ற ஒரு திட்டத்தை தொடங்கி இருக்கிறது . அதன் ஒரு பகுதியாக தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்திற்கு அமெரிக்க தொழிலாளர்களுக்கு பதிலாக வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவதை தடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இதற்காக இந்த 51 விநாடிகள் கொண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

1960களில் இருந்து தற்போது வரையிலான காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது இருக்கிறது இந்த வீடியோ. அதில் பின்னணியில் கடினமாக உழைத்தால் அமெரிக்க கனவை அடைந்துவிட முடியும் என கூறினார்கள், ஆனால் பல அமெரிக்க இளைஞர்களின் கனவுகள் வெளிநாட்டு ஊழியர்களால் களவாடப்பட்டன , தற்போது பிராஜெக்ட் ஃபையர்வால் மூலம் அமெரிக்கர்களின் கனவு மீண்டும் அமெரிக்கர்களுக்கே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என வாய்ஸ் ஓவர் இடம்பெற்றுள்ளது. ஹெச்1பி விசா தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களையே பணிக்கு அமர்த்துவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என கூறுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+