ரீடைல் விற்பனையாளர்களிடம் நியாயமான காரணம் இல்லாவிட்டால், யாரும் தங்களுடைய ப்ரசனல் மொபைல் எண்ணைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுச் சுகாதார ஆர்வலரான தினேஷ் எஸ் தாக்கூர் தனது டிவிட்டரில் டெல்லி விமான நிலையத்தில் சூயிங் கம் வாங்கும் போது தனது மொபைல் எண்ணை எப்படிக் கேட்டீர்கள் என்று ட்வீட்டில் பதிவை செய்துள்ளார்.
இந்த டிவீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆலோசனை டிவிட்டரில் கொடுத்துள்ளார்.
இந்திய சந்தை
இந்தப் போட்டி மிகுந்த இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க ரீடைல் விற்பனை நிறுவனங்கள் கஸ்டமர்களின் மொபைல் நம்பரை வாங்குவது பல இடங்களில் நடக்கிறது. இந்த டிஜிட்டல் உலகில் போதுமான அதிகப்படியான இணையத் திருட்டு நடக்கும் வேளையில் ரீடைல் விற்பனையாளர்களிடம் கொடுக்கப்பட்டும் தனிநபர் தகவல் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழும் வேளையில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டிவிட்டரில் முக்கியமான ஆலோசனை கொடுத்துள்ளார்.
டெல்லி விமான நிலையம்
பொதுச் சுகாதார ஆர்வலரான தினேஷ் எஸ் தாக்கூர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், "டெல்லி விமான நிலையத்தில் இன்று சுவாரஸ்யமான அனுபவம் நிகழ்ந்தது. புத்தகக் கடை ஒன்றில் சூயிங் கம் பேக்கெட் வாங்க முடிவு செய்தேன், பில் போட சென்ற போது என் தொலைபேசி எண்ணை கேட்டார்கள். சூயிங் கம் பேக் வாங்குவதற்கு எனது தொலைபேசி எண் எதற்கு என்று நான் கேட்டபோது, அது 'பாதுகாப்பு காரணங்களுக்காக' என்று என்னிடம் கூறினார்கள்.
செக்யூரிட்டி காரணம்
சூயிங் கம் பேக்கெட் வாங்குவதற்கு எதற்காகச் செக்யூரிட்டி எனக் கேட்டதற்கு எவ்விதமான பதிலும் இல்லாமல் விழித்தார்கள். உடனே மேனேஜர் வந்தார், அவரிடம் செக்யூரிட்டி ரிஸ்க் என்றால் எப்படி இரண்டு பாதுகாப்பு சோதனையைத் தாண்டி வந்திருக்க முடியும் எனக் கேட்டேன்.
அறியாமை
எதையும் வாங்காமல் வந்துவிட்டதாகத் தினேஷ் எஸ் தாக்கூர் தனது டிவீட்டில் பகிர்ந்துள்ளார். மேலும் பல பயணிகள் எவ்விதமான கேள்வியும் கேட்காமல் பர்சனல் மொபைல் நம்பரை கொடுத்து வருகிறார்கள். நான் இங்கே தவறவிடுவது என்ன? நாம் எப்படி இவ்வளவு அறியாமையுடனும் அக்கறையற்றவர்களாகவும் இருக்க முடியும்? என்றும் டிவீட் செய்துள்ளார்.
ராஜீவ் சந்திரசேகர்
இந்த நிலையில் தாக்கூரின் ட்வீட்டுக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "உங்கள் மொபைல் எண்ணை ரீடைல் விற்பனையாளர் வைத்திருப்பதற்கு நியாயமான காரணம் இல்லை என்றால் கொடுக்க வேண்டாம். DPDP மசோதா சட்டத்திற்குப் பிறகு இந்தியர்களின் டிஜிட்டல் தனிப்பட்ட தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவது நிறுத்தப்படும்".
DPDP மசோதா 2022
DIGITAL PERSONAL DATA PROTECTION BILL, 2022 மசோதா மூலம் தனிநபர் தகவல் திருடப்பட்டால் 500 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் விதிமுறை உள்ளது. அதாவது மக்களின் தனிநபர் தரவுகளைச் சேகரிக்கும் நிறுவனங்கள் போதுமான பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படாமல் தகவல் திருட்டை எதிர்கொண்டால் தகவலைப் பாதுகாக்க முடியாமல் போனதற்காக 500 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக இந்த மசோதா கூறுகிறது.


Click it and Unblock the Notifications