கொரோனா வைரஸ் பிரச்சனை வந்ததில் இருந்து, இந்திய பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களும் தலை கீழ் மாற்றம் கண்டு வருகின்றன.
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால் மக்கள் அதிகம் அவதிப்படக் கூடாது என்கிற எண்ணத்தில், குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் ஆர்பிஐ தன் ரெப்போ வட்டி விகிதங்களை 4 சதவிகிதமாகக் குறைத்தார்கள்.
மார்ச் 2020-ல் மட்டும் 0.75 % மற்றும் மே 2020-ல் மேலும் 0.40 % ரெப்போ வட்டியைக் குறைத்தார்கள்.
தற்போதைய வட்டி விகிதம்
தற்போது ஆர்பிஐ மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் வெறும் 4.0 சதவிகிதமாக இருக்கிறது. மற்ற வங்கிகள் ஆர்பிஐக்கு கொடுக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதம் 3.35 சதவிகிதமாகவும், MSLR விகிதம் 4.25 சதவிகிதமாகவும் இருக்கிறது. CRR 3 சதவிகிதமாகவும், SLR 18 சதவிகிதமாகவும் இருக்கிறது.
மானிட்டரி பாலிசி கூட்டம்
தற்போது, ஆர்பிஐ வங்கியின் மானிட்டரி பாலிசி கூட்டம் இன்று முதல் ஆகஸ்ட் 06 2020 வரை நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் தான், மேலும் ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைக்குமா என்கிற முடிவை எடுப்பார்கள். ஏற்கனவே நிறைய வட்டி விகிதங்களைக் ஆர்பிஐ குறைத்துவிட்டது. கடந்த 01 ஆகஸ்ட் 2018 காலகட்டத்தில் 6.5 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை மெல்ல மெல்ல 4 சதவிகிதத்துக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்.
2008 - 2020
2008 பொருளாதார நெருக்கடி வந்த காலத்தில் ஜூலை 2008 காலகட்டத்தில் 9.0 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் ஏப்ரல் 2009 காலகட்டத்தில் 4.75 சதவிகிதமாக குறைத்தார்கள். அதே போல இன்று, ஆர்பிஐ தன் ரெப்போ வட்டி விகிதத்தை அதை விட குறைவாக 4.0 சதவிகிதம் வரை குறைத்து இருக்கிறார்கள்.
நோ வட்டி குறைப்பு
இந்த அளவுக்கு வட்டி விகிதங்களைக் குறைத்த பின், மேலும் வட்டி விகிதங்களைக் குறைப்பது சாத்தியமில்லை என்கிறது ஒரு தரப்பு. வட்டி விகிதங்களால், பொருளாதாரத்தில் டிமாண்டை பெரிய அளவில் அதிகரிக்க வைக்க முடியாது. கொரோனா பிரச்சனை வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என் இரண்டு தரப்பினர்களையும் பாதித்துக் கொண்டு இருக்கிறது. எனவே ஆர்பிஐயின் மானிட்டரி பாலிசி கமிட்டி, இந்த ஆகஸ்டில் எந்த வட்டி விகித குறைப்பையும் செய்யாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications