சென்னை: உடல் பருமனின் தலைநகரம் இந்தியா எனக் கூறும் அளவுக்கு இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக உருவாகி வருகிறது. உடல் பருமன் வாழ்க்கை முறை மாற்றங்களாலும் ,போதிய உடல் உழைப்பு இல்லாததாலும் , உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களாலும் ஏற்படுகிறது.
உடல் பருமன் தேசிய பிரச்சினை: உடல் பருமன் தன்னுடன் பல்வேறு நோய்களையும் அழைத்து வருகிறது .உடல் பருமனுடன் இருப்பவர்கள் நாளடைவில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஒரு தேசிய பிரச்சனையாக உருவாகி இருப்பது தான் கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் . பிரதமர் நரேந்திர மோடி கூட கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய மன் கி பாத் நிகழ்வில் எட்டு பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள் என ஒரு ஆய்வு அறிக்கை வெளியானதை சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.

பல பிரச்சினைகளை உருவாக்கும்: குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது எனக் கூறியிருந்த அவர் மக்கள் தங்களுடைய உணவில் பயன்படுத்தும் எண்ணெயில் 10% குறைத்துக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார் . உடல் பருமன் என்பது நீண்ட கால அடிப்படையில் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் , நீரிழிவு , ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. இது நாட்டின் எதிர்காலத்திற்கே பெரிய பிரச்சினையாக மாறிவிடும்.
இரண்டு ஊசிகள் அறிமுகம்: இந்த சூழலில் தான் இந்திய சந்தையில் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வு எனக் கூறி இரண்டு மருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒன்று மௌஞ்சாரா (Mounjaro ) , மற்றொன்ரு வெகோவி (wegovy). இந்தியாவில் உடல் பருமன் சிகிச்சை என்பது தற்போது மிகப்பெரிய ஒரு சந்தை வாய்ப்பாக உருவாகியிருக்கிறது. எனவேதான் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய உடல் எடை குறைப்பு மருந்துகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கின்றன.
விலை எவ்வளவு?: மௌஞ்சாரோ ஊசி வாரம் ஒரு முறை செலுத்தக் கூடியது இதில் 5 mg கொண்ட ஊசி இந்தியாவில் 4,375 ரூபாய்க்கும் , 2.5 mg ஊசி 3,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெகோவி 0.25, 0.5, 1 mg ஆகிய அளவுகளில் கிடைக்கிறது. ஒரு டோஸ் 4,336 ரூபாய்க்கு கிடைக்கிறது. டோஸ் அதிகரிக்க அதிகரிக்க விலையும் அதிகரிக்கும். தொடர் உடல் எடை மேலாண்மை சிகிச்சைக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், இதயம் சம்பந்தப்பட்ட நோய் அபாயத்தை குறைப்பதற்கும் இந்த மருந்தை பயன்படுத்த அரசு அனுமதிக்கிறது.

Pic courtesy: thebusinessresearchcompany
யாருக்கு வழங்கலாம்?: இந்திய அரசின் பிஎம்ஐ வழிகாட்டுதலின்படி பார்க்கும்போது 25க்கு மேல் ஒருவருடைய பிஎம்ஐ அளவு இருக்கிறது என்றால் அவருக்கு நீரிழிவு, கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் , பிசிஓடி பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என கூறுகிறது. இவர்களுக்கு இந்த மருந்துகளை பரிந்துரைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசியை கட்டுப்படுத்தும் : Semaglutide அடிப்படையில் இந்த இரண்டு மருந்துகளும் செயல்படுகின்றன. பொதுவாக நாம் உணவு உண்ட பிறகு நம்முடைய குடல் பெப்டைட் 1 என்ற ஹார்மோனை வெளியிடும். இந்த ஹார்மோன் நம் வயிறு நிரம்பிய உணர்வை நமக்கு தந்துவிடும். அந்த ஹார்மோனை பிரதிபலிக்கும் மருந்துகள் தான் இவை. இந்த மருந்தினை செலுத்திய உடன் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும், பசி எடுக்காது தேவையில்லாமல் நாம் உணவு எடுத்து கொள்ள மாட்டோம்.

சோதனை முடிவுகள் என்ன சொல்கின்றன: அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கலாம் என 2017ஆம் ஆண்டு வெகோவி மருந்துக்கு அனுமதி தந்தது பின்னர் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு வழங்கலாம் என அனுமதித்தது. முதலில் வெகோவி மருந்தினை 4500 பேரை நான்கு குழுக்களாக பிரித்து சோதனை செய்ததாகவும் அந்த சோதனையில் பங்கேற்ற 84 சதவீத நோயாளிகளுக்கு உடல் எடை 5 சதவீதத்திற்கும் மேல் குறைந்ததாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் வெகோவி மருந்தினை அமெரிக்க அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி தந்தது.

எந்த நாடுகளில் அனுமதி: தற்போது 16 நாடுகள் இவ்வகை எடை குறைப்பு ஊசிகளை அனுமதித்திருக்கின்றன.
1. அமெரிக்கா
2. பிரிட்டன்
3. ஜெர்மனி
4. டென்மார்க்
5. நார்வே
6. ஸ்விட்சர்லாந்து
7. ஐஸ்லாந்து
8. ஐக்கிய அரபு அமீரகம்
9. ஜப்பான்
10. ஸ்பெயின்
11. கனடா
12. ஆஸ்திரேலியா
13. இந்தியா
14. பிரான்ஸ்
15. இத்தாலி
16. பிரேசில்
பின்விளைவுகள் : மக்களே தாங்களாவே எப்படி இன்சுலின் செலுத்தி கொள்கிறார்களோ அப்படி வெகோவி மருந்தினையும் செலுத்தி கொள்ளலாம். பொதுவாக இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு வாந்தி ,குமட்டல், வயிற்றுப்போக்கு , மலச்சிக்கல், தலைவலி, சோர்வு, அஜீரண கோளாறு, வயிறு வீக்கம் அடைவது, இரத்த சர்க்கரை குறைவு, வாயு பிரச்சனை உள்ளிட்டவை ஏற்படுவதாக வெகோவி நிறுவனமே கூறுகிறது. ஆனால் இவை தீவிர பிரச்சினைகளாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
மருந்து மட்டுமே போதாது: ஆனால் உடல் எடை குறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த மருந்து மட்டுமே செலுத்தினால் போதும் என மெத்தனமாக இருக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது உடல் எடை மேலாண்மைக்கு உதவும் ஆனால் இது மட்டுமே நம்பி மனிதர்களாகிய நாம் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்துவிட கூடாது என்கின்றனர். வெகோவி மருந்து செலுத்தி உடல் எடை குறைந்தவர்களுக்கு மருந்து நிறுத்திய 2 முதல் 4 ஆண்டுகள் வரை உடல் எடை உயராமல் இருந்தது மருத்துவ சோதனையின் போது தெரிய வந்ததாக வெகோவி குறிப்பிடுகிறது. ஆனால் அதன் பின்னர் உடல் எடை உயரும் என்பதால் நம் சார்பாகவும் உடற்பயிற்சி போன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications