டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக அதிகபட்சமாக 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேசமயம் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 23 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது.
ஆம் ஆத்மி கிட்டத்தட்ட ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுக்க போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் களையிழந்து போயியுள்ளனர். நியூடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளா பர்வேஷ் வர்மாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு மற்றும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

டெல்லி தேர்தல் முடிவுகளை விடுங்க, உங்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?, அவரை சொன்ன சொத்து மதிப்பு கொஞ்சம் பாருங்க. அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கலின்போது, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு மொத்தம் ரூ.1.73 கோடி நிகர சொத்துக்கள் உள்ளதாக அறிவித்து இருந்தார். அதில் அவரது வங்கி சேமிப்பான ரூ.2.96 லட்சமும், கையில் ரொக்கமாக உள்ள ரூ.50,000ம் அடங்கும். கெஜ்ரிவாலிடம் ரூ.1.70 கோடி மதிப்புள்ள அசையாக சொத்துக்கள் உள்ளன. தனக்கு சொந்தமாக வீடோ அல்லது காரோ கிடையாது என பிரமாணப்பத்திரத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடந்த 2023-24ம் நிதியாண்டில் அவரது வருமானம் ரூ.7.21 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.5 கோடி. அதில் ரூ.1 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. இதில், ரூ.25 லட்சம் மதிப்புள்ள 320 கிராம் தங்கம் மற்றும் ரூ.92,000 மதிப்புள்ள 1 கிலோ வெள்ளியும் அடங்கும். சுனிதா கெஜ்ரிவாலின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். குருகிராமில் ஒரு வீடும், 5 இருக்கைகள் கொண்ட ஒரு காரும் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தம்பதியின் மொத்த நிகர மதிப்பு ரூ.4.23 கோடி.
கடந்த பல ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் தம்பதிகளின் சொத்து மதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2015 தேர்தல் பிரமாண பத்திரத்தில், அவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ.2.1 கோடியாக இருந்தது. இது 2020 தேர்தலில் ரூ.3.4 கோடியாக உயர்ந்தது. 2025 தேர்தல் பிராமண பத்திரத்தில், தனக்கும், தன் மனைவிக்கும் மொத்தம் ரூ.4.30 கோடி மதிப்புக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications