கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டை நகரில் 1996 ஏப்ரல் 5ம் தேதியன்று சுமன் மந்தனா-மதன் மந்தனா தம்பதிக்கு மகளாக ராஷ்மிகா மந்தனா பிறந்தார். இவருக்கு ஷிமன் மந்தனா என்ற ஒரு சகோதரியும் உள்ளார். பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமய்யா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
2014ல் கிளீன் அண்ட் கிளியர் டைம்ஸ் .ஃப்ரெஷ் ஃபேஸ் பட்டத்தை வென்றதையடுத்து அவர் புகழ் பெற்றார். 2016ல் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் வாயிலாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்து வருகிறார். கீதா கோவிந்தம், புஷ்பா என இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. இது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

2022ல் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த 'குட்பை' என்ற படம் வாயிலாக பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்த அனிமல் படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போடுகிறது. இது பாலிவுட்டில் ராசியான நடிகையாக அவரை ஆக்கியுள்ளது.
இவர் படங்களில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இவது தனது வருமானத்தை புத்திசாலித்தனமாக சொத்துகளில் முதலீடு செய்து வருகிறார். 27 வயதான ராஷ்மிகா வந்தனாவின் செல்வ செழிப்பான வாழ்க்கை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
நடிகை ராஷ்மிகா நடிப்பதற்காக பல்வேறு நகரங்களுக்கு செல்வதால அந்தந்த நகரங்களில் தங்குவதற்காக ஒரு வீட்டை அல்லது பங்களாவை வாங்கி விடுகிறார். உதாரணமாக பெங்களூருவில் ரூ.8 கோடி மதிப்பிலான பங்களா, ஆடம்பரமான மும்பை அடுக்குமாடி குடியிருப்பு, கோவா, கூர்க் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பிரமிக்க சொத்துக்கள் உள்ளன.
நகரங்களில் பயணிப்பதற்காக ஆடி க்யூ3, நவீன அம்சங்களுடன் கூடிய இந்த ஜெர்மன் எஸ்.வி.யூ. காரை அதிகம் பயன்படுத்துகிறார். இது தவிர அவரது வீட்டில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ், டொயோட்டா இன்னோவா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களும் உள்ளன.
என்னதான் பிசியாக படத்தில் நடித்தாலும் தன்னை ரிலாக்ஸாக வைத்து கொள்வதற்காக ஓய்வுக்காக வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார். அங்கு செய்யும் சாகசங்களையும், தனது மகிழ்ச்சியான தருணங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அனைவரையும் ஏங்க வைப்பார்.
புகழ் இருக்கும்போதே நாலு காசு சம்பாதித்து விட வேண்டும் என்பதில் நடிகை தெளிவாக இருக்கிறார். சினிமாவை தவிர்த்து விளம்பரங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார். கல்யாண் ஜூவல்லர்ஸ், எப்சன் இந்தியா, ஒனிட்சுகா டைகர் மற்றும் பெப்சிகோவின் 7அப் போன்ற பிராண்ட் விளம்பரங்களில் நடித்துள்ளார்.
ஒவ்வொரு படத்துக்கும் சுமார் ரூ.4 கோடி வாங்குவதாக தகவல். தற்போது அனிமல் படம் வெற்றி பெற்றுள்ளதால் அவரது சம்பளம் மேலும் அதிகரிக்கக்கூடும். இவருடைய சொத்து மதிப்பு ரூ.45 கோடி என தகவல்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications