மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், இவர் கால் பதிக்கும் துறைகளில் எல்லாம் வெற்றி என முகேஷ் அம்பானி என்றாலே வியக்க வைக்கிறார். இவ்வளவு பெரிய சொத்துகளுக்கு வாரிசாக இருக்கிறார்கள் இவரது மகன்கள் ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் மகள் ஈஷா அம்பானி.
இவர்களில் ஆனந்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். அண்மையில் தான் ஆனந்துக்கு திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆனந்த் அம்பானி 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி பிறந்தவர். இவர் பிறந்த அந்த காலகட்டத்தில் தான் முகேஷ் அம்பானி நிறுவனமும் படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்தது. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு தொழில் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆனந்த் அம்பானிக்கு சிறுவயதிலிருந்தே தொழில்கள் மீதான ஆர்வம் அதிகம்.
ஆனந்த் மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் இதனை அடுத்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த பிரிவில் மேற்படிப்பினை முடித்தார்.
தற்போது ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் குடும்பத்தில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் அம்பானி. அதுமட்டுமின்றி ரிலையன்ஸின் சில்லறை விற்பனை வணிகத்தை விரிவுபடுத்தும் பொறுப்பும் ஆனந்த் அம்பானி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் சிஎஸ்ஆர் திட்டங்களை கையாள்வது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் ஆனந்த் அம்பானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இயற்கையை காக்க வேண்டும், வனவிலங்குகள் குறிப்பாக யானைகளை காக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் ஆனந்த். எனவே ரிலையன்ஸ் குழுமத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான நடைமுறைகளை கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
அதுமட்டுமின்றி ரிலையன்ஸ் அறக்கட்டளையிலும் ஆனந்த் அம்பானிக்கு முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் திட்டம் மற்றும் சுகாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் அம்பானி. எதிர்காலத்தில் ரிலையன்ஸ் குழுமத்தில் இவர் ஒரு முக்கியமான நபராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
திருமண நிகழ்ச்சியின் போது பேசிய முகேஷ் நீதா தம்பதியினர் திருபாய் அம்பானியின் குணாதிசயங்களை ஆனந்திடம் பார்ப்பதாக கூறினர். ரிலையன்ஸ் குழுமத்திற்கு அடித்தளமே திருபாய் அம்பானி தான். அவரிடம் இருந்து நிறுவனத்தை பெற்று கொண்டு முகேஷ் அம்பானி அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். தற்போது அவரது பிள்ளைகளும் தொழிலை கையிலெடுக்க வந்துவிட்டனர்.
Story Written by: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications