இ-ஆதார் கார்டு என்பது ஆதார் கார்டின் டிஜிட்டல் வடிவமாகும். இதை பல்வேறு அரசு திட்டங்களுக்கு விவரங்கள் சரிபார்ப்பதற்கு பயன்படும்.
காஆதார் அட்டையைப் போலவே, பயோமெட்ரிக் தரவு, மக்கள்தொகை விவரங்கள், ஆதார் எண் மற்றும் புகைப்படம் போன்ற அத்தியாவசியத் தகவல்களும், உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற பொதுவான தகவல்களும் இ-ஆதார் அட்டையில் அடங்கும்.

இ-ஆதார் கார்டு பெறுவது எப்படி என்பதை படிப்படியாக வழிமுறையில் தெரிந்துக்கொள்ளுங்கள். முதலில் ஆதார் UIDAI தளத்தில் உள்நுழைவதற்கு ஆதார் கார்டு பதிவு எண்களைத் தயாராக வைத்திருங்கள்.
உங்களிடம் ஆதார் அட்டை எண் இல்லை என்றால், உங்கள் பதிவு எண்ணுடன், ஒப்புகை சீட்டில் வழங்கப்பட்ட நேரம் மற்றும் தேதியுடன் தயாராக வைத்திருக்கலாம். உங்கள் இ-ஆதார் கார்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான படிகள்:
முதலில் https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணைதளத்திற்கு செல்லுங்கள். பின்னர் இந்தப் படிகளைப் பின்பற்றுங்க.
உங்கள் முழுப்பெயர், பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிடவும்.
'ஓடிபி அனுப்பு' என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஒருமுறை கடவுச்சொல்லைச் சமர்ப்பிக்கவும்.
இப்போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட ஆதார் எண்/பதிவு ஐடியை சரிபார்க்கவும்.
அதிகாரப்பூர்வ யுஐடிஏஐ இணையதளத்தில் இ-ஆதார் பக்கத்துக்குச் சென்று 28 இலக்க பதிவு ஐடி / 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
இப்போது, பாதுகாப்புக் குறியீட்டைச் சமர்ப்பித்து, 'ஓடிபியை அனுப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.
முடிவில், இந்த OTP ஐச் சமர்ப்பித்து, 'சரிபார்த்து பதிவிறக்கம்' என்பதைக் கிளிக் செய்த பிறகு நீங்கள் மின்-ஆதார் அட்டையைப் பதிவிறக்க முடியும். பதிவிறக்கம் செய்த பிறகு, ஆதார் அட்டையை அச்சிடலாம்.
பதிவு எண்ணுடன் இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான படிகள்:
பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பதிவு ஐடியை (EID) பயன்படுத்தி ஒருவர் இ-ஆதார் அட்டையைப் பதிவிறக்கலாம்.
https://myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற தளத்துக்குச் சென்று உங்களின் 28 இலக்க பதிவு ஐடி மற்றும் கொடுக்கப்பட்ட பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிடவும்.
உருவாக்கப்பட்ட OTP ஐ உள்ளிட்ட பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு தனிப்பட்ட குறியீடு அனுப்பப்படும்.
பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, 'சரிபார்த்து பதிவிறக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது உங்களது இ-ஆதாரின் நகலை பதிவிறக்கம் செய்ய முடியும்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications