பள்ளி படிப்பை முடித்துவிட்டு அடுத்து எந்த கல்லூரியில் சேர்வது எந்த படிப்பை தேர்வு செய்வது என மாணவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். நாம் தற்போது இந்தியாவில் பட்டப்படிப்பு தேவைப்படாத ஆனால் அதிக சம்பளம் தரக்கூடிய ஐந்து வேலை வாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்..
கமர்ஷியல் விமானி (Commercial Pilot): இந்தியாவில் கமர்ஷியல் விமானியாவதற்கு பட்டப்படிப்புகள் தேவையில்லை. கமர்ஷியல் பைலட்டாக வேண்டும் என்பவர்கள், இதற்காக பயிற்சி வழங்கக்கூடிய நிறுவனங்களில் சேர்ந்து முறையாக பயிற்சி பெற்று சான்றிதழை பெற்றால் போதுமானது.

இந்தியாவில் Rajiv Gandhi Aviation Academy, The Bombay Flying Club, the Indira Gandhi Institute of Aeronautics உள்ளிட்ட நிறுவனங்கள் இதுபோன்ற விமானிகளுக்கான பயிற்சிகளை வழங்குகின்றன. இவற்றுக்கான கட்டணம் 2 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் வரை உள்ளது.
இந்தியாவைப் பொறுத்த இந்த பள்ளிகளில் கிடைக்கும் சான்றிதழ்களின் அடிப்படையில் முறையான பயிற்சி முடித்தவர்கள் DGCA மற்றும் FAA உரிமத்தை பெற்றால் போதுமானது. இந்தியாவில் கமர்சியல் பைலட்டுகள் ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
எத்திகல் ஹேக்கர் (Ethical Hacker): சைபர் பாதுகாப்பு துறைகளில் பணிபுரிபவர்கள் பல்வேறு ஆன்லைன் ஆதாரங்கள் மூலமாகவும் பல்வேறு வகுப்புகள் மூலமாகவும் இதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும். Certified Ethical Hacker (CEH), Offensive Security Certified Professional (OSCP) ஆகிய சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு எத்திகல் ஹேக்கராக பணிபுரியலாம். இந்தியாவில் இந்த எத்திக்கல் ஹேக்கர்களுக்கு 38 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் கிடைக்கிறது.
முதலீட்டு ஆலோசகர்கள் (Investment advisor): இந்தியாவில் தற்போது முதலீட்டு ஆலோசகர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக முதலீடுளை மேலாண்மை செய்வது, ஒரு குறிப்பிட்ட நிதி இலக்குகளை அடைவது என்பன போன்ற பணிகளுக்கும், முதலீட்டு வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் முதலீட்டு ஆலோசகர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்கு டிகிரி தேவையில்லை. ஆனால் இதற்காக படித்து தேர்வு எழுத வேண்டும் . பின்னர் செபியில் பதிவு செய்து கொண்டு முதலீட்டு ஆலோசகர்களாக மாறலாம். இந்தியாவில் இந்த பணிக்கு ஆண்டுக்கு 40 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.
விமான பணியாளர்கள் (Flight attendants): இந்த வேலைக்கு 12ஆம் வகுப்பு முடித்து விட்டு உரிய பயிற்சி பெற்றிருந்தாலே போதுமானது. இதற்காக பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றால் போதும். விமான பணியாளர்களுக்கு இந்தியாவில் 20 லட்சம் வரை ஆண்டு ஊதியம் கிடைக்கிறது.
சமையல் கலைஞர் (Chef or Head Cook): சமையல் கலைஞர்கள் பணிக்கு தற்போது டிமாண்ட் அதிகம். பெரிய பெரிய உணவகங்கள் மற்றும் கப்பல்களில் தலைமை சமையல் கலைஞராக பணியில் சேர்வதற்கு டிகிரி தேவையில்லை. சான்றிதழ் படிப்பை முடித்தாலே போதும்.இந்தியாவில் இந்த வேலைகளுக்கு ஆண்டுக்கு 38 லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications