ஐபிஎல் உரிமையாளர்கள் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?.. இவ்வளவு விஷயம் இருக்கா? இத படிங்க.!!

உலகளவில் மிகவும் இலாபகரமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உள்ளது, பார்வையாளர்கள் மற்றும் வருவாய் அடிப்படையில் முக்கிய சர்வதேச போட்டிகளுக்கு போட்டியாக உள்ளது. ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை குறித்து பார்ப்போம்.

அப்போதைய பிசிசிஐ துணைத் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் தொடர் குறித்து ஆலோசனை முன்னெடுத்தார். இறுதியாக 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி "இந்தியன் பிரீமியர் லீக்" தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்தது. பின்னர் ஜனவரி 24, 2008 அன்று முதல் ஐபிஎல் ஏலங்கள் நடத்தப்பட்டன. அந்த சமயத்தில் ரசிகர்களுக்கு ஐபிஎல் பற்றிய பெரிய ஆர்வம் இல்லாததால் ஒவ்வொரு அணியும் அந்த ஊர் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஒரு வீரரை தேர்வு செய்தது. இதையடுத்து இந்த விளையாட்டு படிப்படியாக தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது. ஐ.பி.எல். முன்னணி வீரர்களும், இந்திய இளம் வீரர்களும் இணைந்து விளையாடும் இந்த டி20 தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையுடன் உலா வரும் அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை அணிகள் உள்ளன.

ஐபிஎல் உரிமையாளர்கள் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா?.. இவ்வளவு விஷயம் இருக்கா? இத படிங்க.!!

இந்தியா - பாகிஸ்தான் எப்படியோ, அதேபோல ஐபிஎல்லில் சென்னை - மும்பை அணி என்றால் ரசிகர்களிடையே தனி உற்சாகம் தான். தோனி விளையாடும் காரணத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் தற்போது தவிர்க்க முடியாத விளையாட்டுப் போட்டியாக மட்டும் அல்லாமல் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் பிரிவாக மாறியுள்ளது. அந்தவகையில், முன்னணி நிறுவனங்கள் ஐபிஎல் அணியை வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படியென்றால் ஐபிஎல் போட்டிகள் மூலம் ஒரு பிரான்சைஸ் நிறுவனம் எப்படி வருமானம் ஈட்டுகிறது..? எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது..? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

இந்தியன் பிரீமியர் லீக் ஏலங்களைப் பொறுத்தவரை, அணிகள் விரும்பிய வீரர்களைப் பெறுவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்றன. அந்தவகையில், 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி ஐபிஎல் வணிக மதிப்பு $16.4 பில்லியனாகவும், ஐபிஎல் பிராண்ட் மதிப்பு $3.4 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டது. மேலும் 2023 ஐபிஎல் சீசன், இந்திய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $11.2 பில்லியனை பங்களித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், ஐபிஎல் 2024 சீசனில், பார்வையாளர்களின் எண்ணிக்கை 620 மில்லியனை எட்டியது. இதுமட்டுமல்லாமல், ஜியோசினிமாவின் ஐபிஎல் ஸ்ட்ரீமிங்கின் இரண்டாவது சீசன், 350 பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமாக பார்க்கப்பட்டது. இது ஐபிஎல் 2020 இன் மொத்த பார்வை நேரத்தை விட மிக அதிகம். அப்போது, 50 பில்லியனுக்கும் அதிகமான நிமிடங்களால் பார்க்கப்பட்டது,

ஐபிஎல் உரிமையாளர்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறார்கள்?: பல்வேறு உரிமையாளர்கள் ஐபிஎல் அணிகளை சொந்தமாக வாங்குகின்றனர். இந்த உரிமையாளர்கள் அணிகளைப் பெறுவதற்கு கணிசமான அளவு பணத்தை முதலீடு செய்கின்றனர். இதன்மூலம் வருவாய் கிடைக்கிறது. ஓடிடி போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், ஆன்லைனில் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதிக்கப்படுகிறது. ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் ஐபிஎல் உரிமையாளர்களின் வருவாய் ஆதாரங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஆடை நிறுவனங்கள், குளிர்பான உற்பத்தியாளர்கள், மொபைல் ஃபோன் பிராண்டுகள் உட்பட பல்வேறு பிராண்டுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒளிபரப்பு உரிமைகள்: கடந்த பத்தாண்டுகளாக ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ ஊடக ஆதரவாளராக சோனி இந்தியாவும், டிரீம் 11 நிறுவனமும் இருந்தன. ஆனால், ஐபிஎல்லின் தற்போதைய டைட்டில் ஸ்பான்சர் டாடா குழுமம் உள்ளது. ஐபிஎல் 2022 இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு ஸ்பான்சராக டிஸ்னி+ஹாட்ஸ்டார் அறிவிக்கப்பட்டது. இதுனுடன் புதிய ஸ்பான்சர்களாக, Zomato, Pristyn Care, Ather Energy, Parle Agro, Livspace, Niyo, Spotify, L'Oreal, Spinny, ஆகியவையும் இணைந்தன. இதையடுத்து, 2023 ஆம் ஆண்டில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளை ரூ.23,575 கோடிக்கு ஸ்டார் இந்தியா வாங்கியதாக கூறப்படுகிறது. ஐபிஎல்லின் ஒவ்வொரு போட்டியின் மூலம் BCCI ரூ.60.18 கோடி சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது, அதே நேரத்தில் BCCI ஊடக உரிமைகளின் ஏலம் ரூ.23,758 கோடியாக உள்ளது. இது ஒரு போட்டிக்கு ரூ.59.10 கோடியாக உள்ளது.

விளம்பரம் மற்றும் பார்வையாளர் வருவாய்: லீக்கின் முடிவில்,
விளம்பரம் மற்றும் பார்வையாளர் வருவாய் ஐபிஎல் அணியின் மொத்த வருவாயில் ஊடக உரிமைகள் 60 முதல் 70% வரை பங்கை பெறுகிறது. இதன் மூலம் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஐபிஎல் உரிமையாளர்கள் KKR இன் நைட் கிளப் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலமும் பணம் சம்பாதிக்கின்றனர்.

டிக்கெட் விற்பனை: மைதானத்தில் நேரில் போட்டிகளைக் காண ரசிகர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள். போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு மற்றொரு முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது.ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளை அவரவர் சொந்த ஊரில் விளையாட உரிமை உண்டு. இதன்மூலமும் நல்ல வருமானம் கிடைக்கிறது. அதனடிப்படையில் ஐபிஎல் அணியின் மொத்த வருவாயில், டிக்கெட் வருவாய் பங்கு சுமார் 10% கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல் நுழைவுச் சீட்டுகள் மற்றும் பாஸ்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உரிமையாளர்களுக்கு முழு உரிமையும் உண்டு. இதுதவிர, விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளில் போட்டிகளை காண்பதன் மூலம் உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைக்கிறது.

வணிகமயமாக்கல்: ஐபிஎல் உரிமையாளர்களுக்கு கூடுதல் வருவாய் ஆதாரமாக ஸ்பான்சர் நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. அணியின் ஜெர்சிகளில் பதிக்கப்படும் லோகோ, பரிசுப்பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் உரிமையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கிறது. உலகளவில் தங்களது பிராண்டுகளை விற்பனை செய்ய உரிமையாளர்களுக்கு, ஐபிஎல் போட்டிகள் ஒரு சிறந்த வாய்ப்பையும், வருமானத்தையும் வழங்குகிறது.

இருப்பினும், பல ஐபிஎல் உரிமையாளர்கள், தங்களது பிராண்டுகள் மக்களை வெகு விரைவில் சென்றடையும் வகையில், உயர்ந்த வணிகப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவில் விளையாட்டு வணிகப் பொருட்களுக்கான சந்தை மதிப்பு ஆண்டுக்கு 100 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இந்த சந்தை மதிப்பு சுமார் 30 மில்லியன் டாலர்கள் ஆக உள்ளது. ஒவ்வொரு உரிமையாளரும் தங்களது பிராண்டுகளான டி-சர்ட்கள், தொப்பிகள், கிரிக்கெட் பேட், கைக்கடிகாரங்கள் மற்றும் பிற பொருட்கள் மூலம் வருவாயை ஈட்டுகின்றனர்.

பங்கு விற்பனை: ஐபிஎல் அணிகள் சரியான நேரத்தில் பங்குகளை விற்றால் பெரிய லாபம் ஈட்ட முடியும். உதாரணமாக ஐபிஎல்லில் JSW GMR கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் தான் அதிக முதலீட்டை செய்துவருகிறது. அதன்படி, JSW நிறுவனம், ஐபிஎல்லில் 50% பங்குகளை ஜிஎம்ஆரிடமிருந்து ரூ.550 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த பங்குகளை 100 சதவீதமாக உயர்த்த JSW நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற பெரிய ஒப்பந்தங்கள் ஒவ்வொரு முறையும் நடக்காது என்றாலும், பங்குகளை விற்பது நிச்சயமாக ஐபிஎல் அணிகளுக்கு பணம் சம்பாதிப்பதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாகும்.

அதாவது, டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் JSW GMR கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் ஆகும். ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து டெல்லி கேபிடல்ஸ் அணி சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. பெண்கள் ஐபிஎல்லிலும் டெல்லி கேபிடல்ஸ் அணியை JSW GMR கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் தான் வைத்துள்ளது. JSW GMR பிரைவேட் லிமிடெட் கிரிக்கெட் மட்டுமில்லாது, கபடி மற்றும் கால்பந்து அணிகளையும் சொந்தமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பான்சர்கள்: இந்திய பிரீமியம் லீக்கில் ஸ்பான்சர்கள்தான் உண்மையான வருமான ஆதாரம். அந்த வகையில், ஐபிஎல் அணிகளின் அனைத்து பொருட்களுக்கும் ஸ்பான்சர்கள் உள்ளனர். ஜெர்சி ஸ்பான்சர்தான் ஒட்டுமொத்த வருமானத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது. அந்தந்த அணிகள், பிராண்ட் நிறுவனங்களுடன் இணைந்து பொருட்களை விளம்பரப்படுத்துகின்றன, அதற்கு ஈடாக உரிமையாளர்களுக்கு அதிக தொகை கிடைக்கிறது.

வீரரின் ஜெர்சிகளில், சராசரியாக 10 பிராண்ட் லோகோக்கள் உள்ளன. ஜெர்சிகளில் 6, பேண்டில் 2 மற்றும் தொப்பியில் மற்றொரு ஜோடி ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும், பிராண்டுகளின் தயாரிப்புகள் குறித்த விளம்பரங்கள் மூலம் விளம்பரதாரர்களும் நல்ல பயனடைகின்றனர். மேலும், ஜெர்சிகளில் தயாரிக்க முடியாத பிராண்டுகள், அணிகளின் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன, எடுத்துக்காட்டாக, சிஎஸ்கே குறைந்தது 18 பிராண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு Etihad Airways டைட்டில் ஸ்பான்சராக உள்ளது.

பரிசுத் தொகை: பரிசுத் தொகையும் ஐபிஎல் உரிமையாளரின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். குறிப்பாக போட்டியின் வெற்றியாளர் அணி, பரிசுத் தொகையில் மிகப்பெரிய பங்கைப் பெறும். இந்த தொகை, அணி உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு கொடுக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், சீசன் வெற்றியாளர்களுக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பிடித்த அணிக்கு 13 கோடி ரூபாய், பிளேஆஃப்களில் மூன்றாவது இடம் பிடித்த அணிக்கு 7 கோடி ரூபாய், பிளேஆஃப்களில் நான்காவது இடம் பிடித்த அணிக்கு 6.5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. மேலும், ஐபிஎல் அணிகள் சம்பாதிக்கும் லாபத்திலேயே இதுதான் மிகவும் குறைந்ததாக இருக்கிறது.

ஐபிஎல் கோப்பையை வெல்வது தான் ஒரு அணியின் நோக்கமே, அதற்கு இவ்வளவுதானா பரிசுத்தொகை என சந்தேகம் ஏற்படக்கூடும். ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரையில், இறுதிப் போட்டிகளில் கிடைக்கக்கூடிய பரிசுத் தொகையானது முக்கியமல்ல. மாறாக ஒரு அணிக்கு கோப்பைதான் முக்கியம். ஏனென்றால், ஒரு அணி கோப்பையை வெல்வதன் மூலம், அந்த அணியின் பிரண்ட் ஸ்பான்சர்ஷிப் அதிகரிக்கிறது. இதன் மூலம் விளம்பர வருவாயும் அதிகரிக்கிறது.

பிராண்ட் மதிப்பு: அணியில் எம்எஸ் தோனி, விராட் கோலி, அல்லது ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தால், பிராண்டுகள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் வெற்றி அல்லது பிளேஆஃப்களுக்குள் நுழைவது கூட ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் பிராண்ட் மதிப்புகளை அதிகரிக்க உதவுகிறது. அந்தவகையில், ஐபிஎல் கோப்பையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்ற எம்ஐ, சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அனைத்தும் பிராண்ட் மதிப்பில் உச்சத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி ஐபிஎல் வணிக மதிப்பு $16.4 பில்லியனாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் பிராண்ட் மதிப்பு $3.4 பில்லியனாக உள்ளது.

அதாவது, அனுபவம் வாய்ந்த வீரர்கள் விளையாடுவதால், சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் அதிகளவில் பார்வையாளர்களை கவர்கிறது. இதேபோல், டெல்லி-பஞ்சாப் உள்ளிட்ட அணிகளில் நடிகர்கள் ஷாருக்கான், ப்ரீத்தா ஜிந்தா, கோடிஸ்வரர்களான கேஷவ் பஞ்சால், நீதா அம்பானி ஆகியோர் உரிமையாளர்களாக இருப்பதாலும் மக்களிடம் பிராண்டுகளின் மதிப்புகள் அதிகரிக்கிறது.

பட்டியலிடப்படாத பங்குகள்: இந்தியாவில், பட்டியலிடப்படாத பங்குகளை வர்த்தகம் செய்யக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட சில விளையாட்டு உரிமையாளர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்றாகும். Pre-IPO பங்குகள் மூலம் ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் வருவாயை ஈட்ட முடிகிறது, இது அவர்களுக்கு நிதியளிப்பதற்கான மதிப்புமிக்க ஆதாரமாக உள்ளது. IPO என்பது, தனியார் நிறுவனம், முதல் முறையாக பொதுமக்களுக்கு பங்குகளை வழங்கும் பொதுவான டிரேடு நிறுவனமாகும்.

ஐபிஎல்லில் முதலீடுகள்: சவுதி அரேபியா 2023 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டது. இதேபோல், ஐபிஎல் அமெரிக்க முதலீட்டாளர்களிடையேயும் அதிக ஆர்வத்தை ஈர்த்து வருகிறது. இதனால் அவர்களும் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்தவகையில், Silver Lake Partners, KKR & Co., மற்றும் TPG Capital போன்ற அமெரிக்க நிறுவனங்கள் ஐபிஎல்லில் 3.2 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளன. ஐபிஎல் ஒரு பிரபலமான விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல; இது இந்தியாவின் பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

OTT தளங்கள்: ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் நிறுவனங்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படும். இதனை 2027ஆம் ஆண்டு வரை ஸ்டார் நிறுவனமும், வியாகாம் நிறுவனமும் சுமார் 48,390 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளன. இதில் கிடைக்கும் லாபத்தை 60:40 என்ற வீதத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் பிரித்துக்கொள்வதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அணிக்கும் சுமார் 2,000 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.

உரிமையாளர்களுக்கான உரிமைகள்: ஐபிஎல் அணிகள் மத்திய வருவாய் தொகுப்பில் ஒரு பங்கைப் பெறுவதன் மூலமும், உள்ளூர் ஸ்பான்சர்ஷிப்களில் கையெழுத்திடுவதன் மூலமும், ஜெர்சி மற்றும் தொப்பிகள் போன்ற அணிப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் உரிமையாளர்கள் சம்பாதிக்கின்றனர். சில அணிகள் சர்வதேச போட்டிகளை ஏற்பாடு செய்கின்றன, சில அணிகள் கிரிக்கெட் அகாடமிகளில் முதலீடு செய்கின்றன இதன் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+