இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது, குறிப்பாக மக்களிடத்தில் அரிதாகக் காணப்பட்ட ஐபோன் இப்போது வீட்டுக்கு ஒன்னு என்ற கணக்கில் வந்துள்ளது. இதற்குப் பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஸ்மார்ட்போன் விற்பனைக்கு ஏற்ப சிம் கார்டுகளின் விற்பனையும் பல மடங்கு இந்தியாவில் அதிகரித்துள்ளது. இன்று, பெரும்பாலான மக்கள் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதே நேரத்தில் சிம் கார்டு தொடர்பான மோசடிகளும், பல தவறான நாச வேலைகள் செய்வது அதிகரித்துள்ளதால், மக்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

நாச வேலைகளுக்கும், மோசடிகளுக்கும், குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தும் சிம் கார்டு பெரும்பாலானவை முறையற்ற வகையில் வாங்கப்பட்டது தான். இப்படியிருக்கும் வேலையில் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதை எப்படிச் செக் செய்வது எனக் குழப்பிக்கொள்ள வேண்டாம், உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள இந்திய அரசின் சஞ்சார் சாத்தி போர்ட்டல் உங்களுக்கு உதவுகிறது.
Sanchar Saathi தளத்தின் மூலம் உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்கும் வெறும் 3 ஸ்டெப்பில் கணக்கிட முடியும். இதை எப்படிச் செக் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
படி 1 - முதலில் உங்கள் பிரவுசரில் Tafcop portal என்பதைத் தேடவும், இதன் பின்பு இத்தளத்தில் Sanchar Saathi என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது முகபக்கத்திலேயே இருக்கும் சேவையை பயன்படுத்தலாம்.

படி 2 - இந்தப் பக்கத்தில் உங்கள் மொபைல் நம்பரை டைப் செய்யவும், டைப் செய்த பின்பு CAPTCHA உள்ளிட்டு, ஓடிபி-ஐ பதிவு செய்து லாகின் செய்யவும்.
படி 3 - அடுத்த பக்கத்தில் உங்க பெயரில் எத்தனை மொபைல் எண் பதிவு செய்யப்பட்டு உள்ளதை தெரிந்துகொள்ள முடியும். இதில் ஏதேனும் மொபைல் நம்பர் உங்களுடையது இல்லை எனில் உடனே இத்தளத்திலேயே Not My Number என்பதைக் கிளிக் செய்து புகார் அளிக்கவும்.
அவ்வாறு செய்தால், அந்த எண் உங்களுடையது அல்ல என்று தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவிக்கப்படும், அதைத் தொடர்ந்து அந்தக் குறிப்பிட்ட எண்ணுக்கான சேவைகளை அரசாங்கம் நிறுத்தக்கூடும்.


Click it and Unblock the Notifications