இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு பெண் விஞ்ஞானி!. அவர் யார் தெரியுமா?.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதி முக்கியமாக உள்ளது நவீன அறிவியல். உலகில் பெரும்பாலான நாடுகளில் கல்வி அறிவு பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில் தினம் தினம் புதுக்கண்டுபிடிப்புகளுடன் முன்னேறி வரும் அறிவியலின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. எனினும் இந்த அறிவியல் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் முக்கியமாக உள்ளது.

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்று. ஆண்டுதோறும் யாரெல்லாம் இந்தப் பரிசை வெல்லப்போகிறார்கள் என உலகமே உற்று நோக்கும். பரிசை பெறுபவர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய கவுரவத்தை அளிக்கும் நோபல் பரிசை இதுவரை எத்தனை பெண்கள் பெற்றுள்ளனர் என்று தெரிந்து கொள்வோம். பல்வேறு துறைகளில் நோபல் பரிசுகளை வென்ற பெண்கள் குறித்து பார்க்கலாம். அதிலும் குறிப்பாக இயற்பியல், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களை பார்க்கலாம்.

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு பெண் விஞ்ஞானி!. அவர் யார் தெரியுமா?.

1901 முதல் 2024 வரை, நோபல் பரிசு மொத்தம் 66 முறை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், மேரி கியூரி இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண்மணி ஆவார். 1896-ல் தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். பொலோனியம் எனும் வேதிப் பொருளையும் கண்டுபிடித்துள்ளார் மேரி க்யூரி. அவருக்கு 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசும், 1911 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இந்த வகையில், மொத்தம் 65 பெண்களுக்கு 66 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

1901 முதல் 1920 வரையில், நான்கு பெண்கள் மட்டுமே இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றனர். இருப்பினும், இதற்குப் பிறகு இந்த விருதைப் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. 1921 மற்றும் 1940 க்கு இடையில், ஐந்து பெண்கள் இந்த விருதைப் பெற்றனர். 1981 முதல் 2000 வரை, 11 பெண்கள், 2001 முதல் 2020 வரை, 28 பெண்கள், 2021 முதல் 2024 வரை, 8 பெண்கள் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றுள்ளனர்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு: அதன்படி, இதுவரை இயற்பியலுக்கான நோபல் பரிசு 5 பெண்கள் பெற்றுள்ளனர். கதிரியக்கத்தை கண்டுபிடித்ததற்காக 1896ல் முதன்முறையாக மேரி கியூரிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, புகழ்பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான மரியா ஜி. மேயர் (Maria Goeppert Mayer), அணு வளிமுறைகள் (nuclear shell model) பற்றிய ஆராய்ச்சிக்கு 1963 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் அறிவியல் வரலாற்றில் நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண் இயற்பியலாளர் ஆவார்.

கனடிய இயற்பியலாளர் மற்றும் லேசர் தொழில்நுட்பத்தில் முன்னணி விஞ்ஞானியுமான டோனா ஸ்ட்ரிக்லேண்ட் (Donna Strickland). இவர் 2018 ஆம் ஆண்டில், "Chirped Pulse Amplification" (CPA) என்ற புதிய லேசர் வளர்த்தல் முறையை கண்டுபிடித்ததற்காக, நோபல் பரிசு பெற்றார். இது அதிக ஆற்றலான, குறுகிய நொடிப் படி (ultrashort pulse) லேசர் கற்றைகளைக் உருவாக்க உதவியது, மருத்துவ மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற மூன்றாவது பெண் ஆவார்.

2020ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை ஆண்ட்ரியா கேஸ் ,(Andrea Gage ) பெற்றார். இவர் கண்ணுக்கு தெரியாத மற்றும் மிகவும் கனமான பொருள் நமது விண்மீனின் மையத்தில் உள்ள நட்சத்திரங்களின் சுற்றுப்பாதைகளை நிர்வகிக்கிறது என்பதை கண்டறிந்ததற்காக இவருக்கு பரிசு அளிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பெண்களின் 5வது இடத்தில் அன்னி எல்'ஹுய்லியர்.(Annie L'Huillier) உள்ளார். இவர் ஒரு பிரெஞ்சு இயற்பியலாளர் ஆவார். அட்டோசெகண்ட் இயற்பியல் (Attosecond Physics) எனப்படும் மிகச் சிறிய கால அளவுகளில் ஒளியின் செயல்பாட்டைப் பற்றிய ஆய்வில் முக்கிய பங்காற்றிய இவருக்கு 2023 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல் வேதியியலிலும் நோபல் பரிசை 8 பெண்கள் பெற்றுள்ளனர். அந்தவகையில், அமெரிக்க வேதியியலாளரான கரோலின் ரூத் பெர்டோஸி, 2022ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். இவர் "கிளிக் இரசாயனம்" (Click Chemistry) மற்றும் பயோஓர்தோகொணல் இரசாயனம் (Bioorthogonal Chemistry) ஆகியவை தொடர்பான ஆய்வுகளில் சிறப்புப் பெற்றார். இந்த தொழில்நுட்பங்கள் மருத்துவ ஆராய்ச்சியில், குறிப்பாக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் மருந்து வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண் அறிவியலாளர்களுக்கு மரபணு மாற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. மரபணு மாற்றத்திற்கான முறையை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வேதிப் பொறியியலாளரான பிரான்சிஸ் எச். அர்னால்டு,(Frances H. Arnold), 2018 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் நிச்சயமற்ற பரிணாம வளர்ச்சி (Directed Evolution) முறையின் மூலம் எஞ்சைம்களின் அபிவிருத்தி" தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த விருதைப் பெற்றார். அடா இ. யோனத் (Ada E. Yonath)என்பவர் இஸ்ரேலை சேர்ந்த உயிரி-வேதியியளாலர் ஆவார். 2009ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் மிகச் சிறிய உயிரணு அமைப்பான ரைபோசோம்களின் (Ribosome) மூலக்கூறு நிலைப்பாடு (Molecular Structure) மற்றும் செயல்பாடு பற்றிய முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டார். அவரது ஆராய்ச்சி, மருந்துகள் உருவாக்கத்தில் பெரும் தாக்கம் செலுத்தியுள்ளது, குறிப்பாக ஆண்டிபயாடிக் (Antibiotic) மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் புரிந்துகொள்ள உதவியது. இவருக்கு 2009ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் இவர், நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டோரதி க்ரோஃபுட்-ஹாட்ஜ்கின் (Dorothy Crowfoot Hodgkin) ஒரு பிரிட்டிஷ் உயிரி-வேதியியலாளர் மற்றும் 1964ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி (X-ray Crystallography) முறை மூலம் முக்கிய உயிர்கேமியல் பொருட்களின் மூலக்கூறு அமைப்புகளை கண்டறிந்தார். ஐரீன் ஜோலியட்-கியூரி (Irène Joliot-Curie) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு வேதியியலாளர் மற்றும் 1935ஆம் ஆண்டு (Artificial Radioactivity) கண்டுபிடித்ததற்காக வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். பொலோனியம் எனும் வேதிப் பொருளையும் கண்டுபிடித்ததற்காக மேரி க்யூரிக்கு 1911 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+