டெல்லி: இந்தியாவில் Indian Administrative Service எனப்படும் ஐஏஎஸ் (IAS) பணி என்பது மிகவும் உயரிய பணியாக பார்க்கப்படுகிறது. யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல், பயிற்சி என பல கட்டங்களை கடந்து தான் ஒருவரால் இந்த பதவியை பெற முடியும். இப்படிப்பட்ட உயரிய பதவிக்கு என்ன ஊதியம் தரப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஐஏஎஸ் பணிக்கான ஊதியத்தை அவர்கள் வேலை செய்யும் மட்டம் மற்றும் பதவி ஆகியவற்றை பொறுத்து மாற்றமடையும். ஐஏஎஸ் அதிகாரிகளின் ஊதியம் மாதம் 56,000 ரூபாயில் தொடங்கி 2.50 லட்சம் வரை இருக்கிறது. அவர்களின் பதவி மற்றும் அனுபவம் , பதவி வகிக்கும் துறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இது நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஐஏஎஸ் கிரேடு ஊதியம்:
ஜூனியர் :
ஊதிய அளவு – ரூ.50,000 – ரூ.1,50,000
தர ஊதியம் – ரூ. 16,500
சீனியர்:
ஊதிய அளவு – ரூ. 50,000-ரூ.1,50,001
தர ஊதியம் – ரூ. 20,000
அனுபவம் - 5 ஆண்டுகள்
ஜூனியர் அட்மினிஸ்டிரேடிவ் கிரேடு:
ஊதிய அளவு – ரூ. 50,000-ரூ.1,50,002
தர ஊதியம் – ரூ. 23,000
அனுபவம் - 9 ஆண்டுகள்
கலெக்டர், கூடுதல் செயலாளர், இணை செயலாளர்:
அடிப்படை ஊதியம் – ரூ.78,800
பே லெவல் – 12
அனுபவம் – 9 முதல் 12 ஆண்டுகள்
டிவிஷ்னல் கமிஷ்னர், செயலாளர் மற்றும் கமிஷ்னர் பதவி:
அடிப்படை ஊதியம் - ரூ. 1,44,200
பே லெவல் - 14
அனுபவம்- 16 முதல் 24 ஆண்டுகள்
கூடுதல் தலைமை செயலாளர்:
அடிப்படை ஊதியம் -ரூ. 2,05,400
பே லெவல் – 16
அனுபவம் – 30 முதல் 33 ஆண்டுகள்
தலைமை செயலாளர்:
அடிப்படை ஊதியம் -ரூ. 2,25,000
பே லெவல் -17
அனுபவம் – 34 முதல் 36 ஆண்டுகள்
அமைச்சரவை செயலாளர்:
அடிப்படை ஊதியம் -ரூ. 2,50,000
பே லெவர் -18
அனுபவம் – 37+ ஆண்டுகள்
ஊதியம் அல்லாத பிற பலன்கள்:
ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் ஊதியம் அடிப்படை ஊதியம், கிரேடு ஊதியம் (தர ஊதியம்) மற்றும் அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு, மருத்துவ அலோவன்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும். இதில் வீட்டு வாடகைக்காக அலோவென்ஸ் என்பது அடிப்படை ஊதியத்தில் 8% முதல் 24% வரை கிடைக்கும். மருத்துவ செலவுகளை கிளெய்ம் செய்யும் வசதி, சொந்த ஊருக்கு அல்லது இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கான தொகை, அரசு வாகனம் மற்றும் அதற்கு ஒரு ஓட்டுநர், பென்சன் உள்ளிட்டவை கிடைக்கின்றன.
உதாரணமாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மாத ஊதியம் பின்வருமாறு இருக்கும்:
அடிப்படை ஊதியம்: ரூ. 56,100
அகவிலைப்படி : ரூ.21,318
வீட்டு வாடகை அலொவென்ஸ்: ரூ.13,464
டிராவல் அலொவென்ஸ்: ரூ.3,600
மொத்த ஊதியம்: ரூ.94,482
Story Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications