லண்டன்: உலக அளவில் சக்தி வாய்ந்த மற்றும் அசைக்க முடியாத அரசு குடும்பமாக பிரிட்டனை சேர்ந்த அரசு குடும்பம் பார்க்கப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கைக்கும் , நிகழ்ச்சிகளுக்கும் பெயர் போனவர்கள். இவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் வருமானம் வருகிறது என்பதை நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
பிரிட்டன் மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து அரசு குடும்பத்திற்கு ஆண்டு தோறும் இறையாண்மை மானியம் என்ற பெயரில் அரசு பணம் வழங்குகிறது. இத்தொகை மன்னரின் அதிகாரப்பூர்வ பணிகளுக்கும், அரண்மனைகளைப் பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தின்படி இறையாண்மை மானியத்திற்கான நிதி, கிரவுன் எஸ்டேட் வருவாயின் லாபத்திலிருந்து கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிரவுன் எஸ்டேட்டை அரசு குடும்பம் கவனித்து கொள்வது கிடையாது. அரசு அதனை பராமரித்து அதில் இருந்து வரும் லாபத்தை எடுத்து கொள்கிறது, அதற்கு ஈடான ஒரு தொகையை மன்னருக்கான மானியமாக வழங்குகிறது.
இதன்படி 2021 -2022 மற்றும் 2022-2023ஆம் நிதியாண்டுகளில் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு இறையாண்மை மானியமாக வழங்கப்பட்ட தொகை 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அரசு வழங்கும் மானியம் , தனிப்பட்ட சொத்துகளின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவையே இவர்களின் வருமான ஆதாரமாகும். குறிப்பாக லான்காஸ்டர் டச்சி என்பது பிரிட்டிஷ் இறையாண்மை பெற்ற ஒரு தனியார் தோட்டமாகும். இந்த தோட்டத்தின் மூலம் அரச குடும்பத்திற்கு வருவாய் வருகிறது. அதே போல கார்ன்வால் மாவட்டத்தின் வருமானமும் பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு அளிக்கப்படுகிறது.
தற்போது பிரிட்டன் மன்னராக இருப்பவர் மூன்றாம் சார்லஸ். இவருக்கு ஆண்டுதோறும் 25 மில்லியன் டாலர்கள் வருமானமாக வருகிறது. குறிப்பாக இவருக்கு சொந்தமான தனிப்பட்ட எஸ்டேட்டில் இருந்து பிரதானமான வருமானம் வருகிறது . இது தவிர பல்வேறு சொத்துக்கள் இவருக்கு சொந்தமாக இருக்கின்றன. மன்னர் சார்லஸை பொறுத்தவரை அவருக்கு சொந்தமான சொத்தின் மதிப்பு 750 மில்லியன் டாலர்கள் ஆகும்.
அடுத்ததாக சார்லஸின் மூத்த மகன் பிரின்ஸ் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் கார்ன்வெல்லின் கோமகன் மற்றும் கோமகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் இருந்து ஆண்டுக்கு 30 மில்லியன் டாலர்கள் வருமானமாக கிடைக்கிறது என சொல்லப்படுகிறது.
இந்த எஸ்டேட் சொத்துக்களில் கிடைக்கும் லாபங்களை இவர்கள் அனுபவிக்க முடியுமே தவிர அவற்றை விற்பனை செய்வது என்பன போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
மன்னர் சார்லஸின் இரண்டாவது மகனான ஹாரி, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறினார். அதற்கு முன்பு வரை அவருக்கு லான்காஸ்டர் டச்சி எஸ்டேட்டில் இருந்து ஒரு கணிசமான தொகை வருமானமாக வந்து கொண்டிருந்து . தற்போது ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் அரச குடும்பத்திலிருந்து எந்த ஒரு நிதியும் பெறுவதில்லை.
எலிசபத்தின் மகள் இளவரசி ஆன், இவருக்கு 1971 ஆம் ஆண்டு முதலில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் ஓர் ஆண்டில் சுமார் 500 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவருக்கு 21 மில்லியன் டாலர்கள் வழங்கப்படுவதாக தெரிகிறது.
மகாராணி எலிசபத்தின் மகன் தான் இளவரசர் எட்வர்டு. இவர் எடின்பர்க் கோமகனாக இருக்கிறார். இவருக்கு 1982ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சுமார் 8.5 மில்லியன் டாலர்கள் வருமானம் வழங்கப்படுகிறது.
எலிசபத்தின் மகன்களுள் ஒருவரான ஆண்டிரூவ் 2019ஆம் ஆண்டில் அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறினார். அதற்கு முன்பு வரை அவருக்கு ஆண்டுக்கு 3.27 லட்சம் டாலர்கள் வழங்கப்பட்டன. தற்போது அவருக்கு அரசு குடும்பத்தில் இருந்து எந்த நிதியும் கிடைப்பதில்லை.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications