ரத்தன் டாடாவின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மீது யாரேனும் ஒரு கல்லை வீசினால் அதனை நீங்கள் என்ன செய்வீர்கள். திரும்ப எடுத்து தாக்கத் தான் பலரும் நினைப்போம். ஆனால் அப்படி வீசப்பட்ட கல்லை வைத்து கட்டிடம் எழுப்புங்கள் என்று கூறுபவர் ரத்தன் நாவல் டாடா.

 

இந்தியாவில் தொடங்கிய தனது வணிகத்தினை, இன்று உலகம் முழுக்க எடுத்து சென்றுள்ள ரத்தன் டாடா, உப்பு முதல் விலை மதிப்பு மிக்க தங்கம், கார் என பலவற்றிலும் வெற்றிகரமாக கோலேச்சி வருகின்றார்.

டாடா குழும நிறுவனம் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் கொண்டாட்டம்..!

 வெற்றிகரமான மனிதர்

வெற்றிகரமான மனிதர்

இப்படி வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் வருமானம் என்ன தெரியுமா? சிறந்த தொழிலபதிராக மட்டும் அல்லது, பில்லியனராகவும் உள்ள இவர், டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். இளைய சமுதாயத்தினருக்கு முன்னோடியாக இருந்து வரும் ரத்தன் டாடா, தொழில் நுணுக்கங்களையும் இளைஞர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். ஏழை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுதிறனாளிகள் என பல லட்சம் பேருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலமாக பல உதவிகளை செய்து வருகின்றார்.

 ஒரு நாள் வருமானம் எவ்வளவு?

ஒரு நாள் வருமானம் எவ்வளவு?

ரத்தன் டாடாவின் ஒரு நாள் வருமானம் என்பது 18,739 ரூபாயாகும் ( இது டாலரில் 347 டாலர்களாகும்).

ஒரு மாதத்திற்கு 5.7 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் (7122 டாலர்)

ஒரு மணி நேரத்தில் அவரின் வருமானம் 780 ரூபாய் (10 டாலர்கள்)

மொத்தமாக விலகல்
 

மொத்தமாக விலகல்

கடந்த 2012ல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு 2017ல் நடராஜன் சந்திரசேகரன் எப்போது பதவிக்கு வந்தாரோ, அப்போது தான் மொத்தமாக தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றார் ரத்தன் டாடா. எனினும் தற்போது வரையில் ரத்தன் டாடா வருடத்திற்கு 68.4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருபவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

முகேஷ் அம்பானியின் சம்பாத்தியம்

முகேஷ் அம்பானியின் சம்பாத்தியம்

இதே மற்றொரு பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 94 பில்லியன் டாலராகும் (7 லட்சம் கோடி). இவர் ஒவ்வொரு நிமிடமும் 22 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக சம்பாதித்து வருகின்றார்.

பில்லியனர் அறிக்கையின் படி,ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 13.67 கோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றார்.

 அம்பானியின் ஒரு நாள் வருமானம்?

அம்பானியின் ஒரு நாள் வருமானம்?


நியூஸ் 18 அறிக்கையின் படி, 2021ல் ஒவ்வொரு நாளும் 164 கோடி ரூபாய் (20 மில்லியன் டாலர்) சம்பாதித்துள்ளார்.

இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக தலைவருமாக உள்ளார். தற்போது தனது மகன்கள், மகளுக்கு பிரித்துக் கொடுக்க தொடங்கியுள்ளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you know how much is Ratan Tata's daily income?

Do you know how much is Ratan Tata's daily income? Do you know how much is Ratan Tata's daily income?/ரத்தன் டாடாவின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X