ஜூன் 29ஆம் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது. சர்வதேச இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக கோப்பையை தாய் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
உலகக்கோப்பை உடன் இந்திய அணிக்கு ஐசிசி வழங்கக்கூடிய 20.4 கோடி பரிசு தொகையும் கிடைத்துள்ளது. இது மட்டும் இன்றி இந்தியா கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயும் நமது இந்திய அணிக்கு 125 கோடி பரிசு தொகையாக அறிவித்திருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை போட்டியை கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் தான் இந்திய அணி எதிர்கொண்டது.

ரோகித் சர்மாவை பொறுத்தவரை பரவலாக ஹிட்மேன் என அறியப்படக்கூடிய ஒரு நபர். இவரது நிகர சொத்து மதிப்பு 214 கோடி ஆகும். இவர் 2021 ஆம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பினை ஏற்றார்.
37 வயதாக கூடிய ரோகித் சர்மா கிரிக்கெட் மட்டுமின்றி பல்வேறு ஸ்டார்ட் அப்களிலும் முதலீடு செய்திருக்கிறார். பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் செயல்பட்டு வரக்கூடிய இவர் க்ரிக்கிங்டம் (CricKingdom) என்ற பெயரில் ஒரு கிரிக்கெட் அகாடமி நடத்தி வருகிறார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய கேப்டனான ரோகித் சர்மாவை பொறுத்தவரை சர்வதேச அளவில் அதிக ஊதியம் பெறக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரராக இருக்கிறார். பிசிசிஐ உடனான இவரது ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு இவருக்கு ஏழு கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
இவரது ஒப்பந்தம் கிரேடு ஏ+ வகையிலானது என்பதால், கேப்டன் என்ற முறையில் ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும் கிடைக்கிறது. அதேபோல ஒவ்வொரு சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கும் இவருக்கு 6 லட்சம் ரூபாய் ஊதியமாக கிடைக்கிறது. ஒவ்வொரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் 3 லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது.
முன்னதாக பிசிசிய தலைவரான ஜெய்ஷா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்போருக்கான சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் இது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, ரவீந்திர ஜடஜா மற்றும் பிறர், வழக்கமாக தங்கள் பெறும் 15 லட்சம் ரூபாய் ஊதியம் மட்டும் இல்லாமல் கூடுதலாக 3.15 கோடி ரூபாயும் வழங்கப்படும். ஆனால் இதற்கு இவர்கள் ஒரு ஆண்டுக்குள் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications