சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் மிக முக்கியமான திரைப்படமாக படையப்பா படம் இருக்கிறது. ரஜினி திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்த சிவாஜி கணேஷன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வசூலை பெற்று வருகிறது, பொதுவாக மறுவெளியீட்டு திரைப்படங்கள் இந்த அளவிற்கு வசூலை பெற்றதில்லை. படையப்பா ரஜினி படம் என்பதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. படையப்பா படம் குறித்து ரஜினிகாந்த் பல விஷயத்தை பேட்டியில் கூறியிருந்தார். அதில், இந்த படத்தில் சிவாஜியை நடிக்க வைக்கலாம் என ரவிக்குமார் என்னிடம் சொன்னபோது முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால், தந்தை கதாபாத்திரம், மிகவும் அழுத்தமான ரோல், சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

சிவாஜியின் சம்பளம்: நானும் சரி, முதலில் அவரிடம் கதையை சொல்லுங்கள் என்று சொன்னேன். ரவிக்குமார், சிவாஜி கணேசனிடம் சென்று கதையைச் சொல்லிவிட்டு வந்து சோகமாக நின்றார். என்ன என்று கேட்டேன். சிவாஜி கணேசன் சார், 5கோடி அல்லது 6 கோடியை சம்பளமாக கேட்கிறார். நம்ப படத்தின் பட்ஜெட்டிற்கு அது பெரிய தொகை, இவ்வளவு பெரிய சம்பளத்தை கொடுத்து அவரை நடிக்க வைக்க வேண்டுமா? வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே? என்றார். இதைக்கேட்டது, பெரிய நடிகரிடம் கதையைச் சொல்லிவிட்டு, அவரும் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, வெறும் சம்பளத்திற்காக அவரை வேண்டாம் என்று சொல்வதைவிட கேவலமான விஷயம் வேற எதுவும் இருக்க முடியாது என்றேன். உடனே, பிரபுவிற்கு ஃபோன் செய்துவிட்டு அடுத்த நாள் காலை, சிவாஜியை சந்தித்து, கட்டாக பணத்தை கொடுத்து நீங்கள் எங்கள் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி என்றேன்.
வியந்துபோனேன்: அடுத்து படப்பிடிப்பு தொடங்கிய போது, படத்திலேயே மிகவும் முக்கியமான காட்சி, வீட்டை விட்டு வெளியேறும் காட்சி, அதில் மணிவண்ணன், சிவாஜி இருவரும் வசனம் பேசுவது போல காட்சி வரும். அந்த வசனத்தை பேச தனி இடத்தில், 7 பக்க வசனத்தையும் மனப்பாடம் செய்து கொண்டு இருந்தார். அதைப்பார்த்து நான், வியந்து போனேன், சார் வாங்க டேங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். ஆனால், அவர், மணிவண்ணன் ரொம்ப நல்லா நடிக்கிறான், இப்போ நம்ப விட்டுவிடக்கூடாது என்று அந்த வசனத்தை திரும்ப திரும்ப மனப்பாடம் செய்து கொண்டே இருந்தார். இந்த வயதில் இப்படியா? என நான் வியந்துவிட்டேன் என ரஜினிகாந்த் அந்த பேட்டியில் படையப்பா படம் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications