ட்விட்டரை வாங்கிய கையோடு அதில் பல சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க், அதன் செலவினை குறைக்க மட்டும் அல்ல, வருவாயினை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
ட்விட்டரின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் விளம்பரங்கள் தற்போது உலக அளவில் நிலவி வரும் மந்த நிலையால், தடைபட்டுள்ள நிலையில், மாற்று வழியினை எலான் மஸ்க் கையில் எடுத்துள்ளார்.
இது ட்விட்டரின் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் விதிப்பது தான். இந்த கட்டணத்தை தற்போது 8 டாலர்களாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் எவ்வளவு கட்டணம்?
ட்விட்டரின் இந்த ப்ளூ டிக் கட்டண முறையானது பல நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளது. இது இந்தியாவில் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவில் கட்டணம் குறித்தான விவரங்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இனி இந்தியாவிலும் பயனர்கள் தங்களுக்கு ப்ளூ டிக் வேண்டுமெனில் மாதம் 719 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கலாம் என தெரிகிறது.
அதிக கட்டணம் ஏன்?
ஏற்கனவே பலரும் ப்ளூ டிக்கினை தங்களது ட்விட்டர் ப்க்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். ட்விட்டர் பயனர்கள் பகிர்ந்துள்ள படங்களின் படி பார்க்கும்போது, அமெரிக்காவில் உள்ள கட்டணத்தை காட்டிலும் இந்தியாவில் கட்டணம் அதிகம் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. ப்ளூ டிக்கிற்கு கட்டண விவரம் குறித்த எலான் மஸ்க், வெவ்வேறு பகுதிகளில் ஊதிய சம நிலைப்படி கட்டணம் மாறுபடும் என கூறப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில் 719 ருபாய் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது டாலரில் 8.93 டாலராகும். இது மற்ற நாடுகளில் வசூலிக்கப்படும் 8 டாலர்களை விட அதிகமாகும்.
இந்தியாவில் மட்டும் அதிகம்
தற்போது இந்தியாவில் ஒரு சிலரே இந்த ப்ளூ டிக்கினை வாங்கியுள்ளனர். கடந்த நவம்பர் இது குறித்து அறிவித்திருந்த எலான் மஸ்க், ஒரு மாதத்திற்குள் இந்தியாவிலும் கட்டண முறை அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் இந்த கட்டண முறைப்படி, ஒரு ட்விட்டர் பயனர் தனது பக்கத்தில் சிலர் இந்தியாவில் ப்ளூ டிக் நடைமுறையை பெற்றுள்ளனர். இதற்கு மாதம் 719 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். இது டாலரின் 8.88 டலார் என்றும் பகிர்ந்துள்ளார். டாலரில் 8 டாலர் என்றால் கூட 648 ரூபாய் தான். இது அதிகம் என கணக்கீடு செய்து பகிர்ந்தும் வருகின்றனர்.
கட்டணம் செலுத்துபவர்களுக்கு சலுகை
இந்த சந்தாமுறையை பெறுபவர்களுக்கு வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஸ்பேம்/ஸ்கேம் என இன்னும் பல ஆப்சன்களிலும் கூடுதலான சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவறாக பயன்படுத்தினால்?
ட்விட்டர் ப்ளூ டிக் சேவையை தற்போது பணம் கொடுத்து பெறும் வசதி உள்ளதால், இதனை சிலர் தவறாக பயன்படுத்தக்கூடும் என்று கூறப்படும் நிலையில், ட்விட்டரை யாராவது தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் தங்களின் பணத்தை இழக்க நேரிடும் என்றும், அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்று எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
பெரியளவில் நிதி திரட்ட திட்டம்
ப்ளூ டிக் வாங்குவதற்கு கட்டணம் செலுத்தினால் மட்டும் போதுமானது, வேறு எந்த வெரிபிகேஷன் செயல்பாடுகளும் தேவையில்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் பெரிய அளவில் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தொடர்ந்து செய்துவரும் இதுபோன்ற அதிரடிகள், அடுத்தடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என அவரே தனது ட்வீட்டில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications