சென்னை: அம்பானி நிறுவனத்தை ஆரத்தழுவி பாராட்டி வருகிறார்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள். இதற்கு மிக மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பல்வேறு கிராமங்கள் தனி தீவுகளாக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை இரவு மழை ஆரம்பித்ததும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு செல்போன் நெட்வொர்க் சேவைகள் முடங்கி விட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகள் கிராமப்புறங்கள் என்பதால் சென்னை போன்று அண்டை அயலாரை உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியது. அப்போது பெரிதும் கை கொடுத்திருக்க வேண்டியது தொலைபேசி மட்டுமே. ஆனால் அதுவும் காலை வாரி விட்டதால் மக்களால் அவசிய தேவைகளுக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஊரில் உள்ளவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை வெளியூர்களில் உள்ள அவர்களது குடும்பத்தினரால் அறிய முடியவில்லை. இதுபோன்ற ரொம்ப மோசமான சூழ்நிலைக்கு செல்போன் நெட்வொர்க்குகள் தள்ளிவிட்டன. ஆனால் சின்ன சின்ன கிராமங்களில் கூட மழை தொடங்கியது முதல் இதுவரை, அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் நெட்வொர்க் சேவைகள் கிடைத்து வருகின்றன.
ஊரில் யாரிடமாவது ஜியோ தொலைபேசி நம்பர் இருக்குமானால் அவர்களிடம் சென்று, ஊர்மக்கள் தங்கள் உறவினர்களுக்கு அழைப்பு மேற்கொண்டு பேசுகிறார்கள். இதன் காரணமாக எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் ஜியோ நிறுவனம் வாய்மொழி வாயிலாக புகழப்பட்டு வருகிறது. குறைந்த செலவில் அதிகமான அழைப்புகள் மற்றும் டேட்டாக்களை ஜியோ தருவதோடு மட்டுமல்லாமல் சின்ன சின்ன கிராமங்களில் கூட நெட்வொர்க் கிடைக்கும்படி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி இருக்கிறார் அம்பானி. இதன் பலனை சாமானிய மக்களும் அனுபவித்த வருகின்றனர்.
அதே நேரம் நிஜமாகவே இந்த வேலையை செய்திருக்க வேண்டிய பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவைகள், மழை தொடங்கியதும் மாயமாகி விட்டது கொடுமை. மத்திய அரசு இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை இந்த பெரிய மழை கற்றுத் தந்திருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications