சென்னை: இந்தியாவில் தற்போது பணி ஓய்வு பெறுவதற்கான வயது 60ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு நாடுகளில் 65 வயது வரை மக்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
ஐஸ்லாந்து: இங்கே சராசரியான பணி ஓய்வு வயது என்பது 67 ஆகும். ஐஸ்லாந்திலேயே 40 ஆண்டுகள் முழுமையாக வசித்து வேலை பார்த்தவர்களுக்கு முழுமையான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். இதுவே கடல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுபவர்கள் 60 வயதிலேயே ஓய்வு பெற்று கொள்ளலாம்.

இஸ்ரேல்: இந்த நாட்டில் ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கான வயது ஆண்களுக்கு 67 ஆகவும் பெண்களுக்கு 62 ஆகவும் இருக்கிறது. இந்த வயதினை எட்டியவர்கள் அரசின் ஓய்வூதிய பலன்களை பெற்றுக் கொள்ள முடியும்.
நார்வே : நார்வேயில் பொதுவாகவே ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கான வயது 67 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு அரசு ஒரு பொது ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தது. இது தனி நபர்கள் 62 முதல் 75 வயதுக்குட்பட்ட காலத்தில் பணி ஓய்வு பெறுவதற்கான வசதியை வழங்குகிறது.
நெதர்லாந்து: 2020 ஆம் ஆண்டில் நெதர்லாந்து அரசு ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கான வயதை 66 ஆண்டுகள் 4 மாதங்கள் என நிர்ணயம் செய்தது. பின்னர் 2024 ஆம் ஆண்டில் இது 67 வயது என உயர்த்தப்பட்டது. இங்கே தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் ஓய்வு காலத்திற்கான நிதியில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற விதி கிடையாது. இருந்தாலும் 90 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை வழங்குகின்றன.
ஆஸ்திரேலியா: இங்கே சராசரி ஓய்வு காலம் 66 வயது ஆகும். அதாவது 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு 55 வயதில் இருந்தே ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டன. 1960 க்கு பின்னர் பிறந்தவர்கள் 66 வயதுக்குள் ஓய்வு பெறலாம்.
அயர்லாந்து : இங்கே ஓய்வு பலன்களை பெறுவதற்கான வயது 66 ஆகும். இதற்கு முன்பு இது 67 ஆக இருந்த நிலையில் தற்போது 66 என குறைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன்: அரசின் ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கான வயது 66 ஆக நிர்ணயம். செய்யப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டுக்குள் 67 ஆக உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா: இங்கே சராசரியாக ஓய்வு பெறுவதற்கான வயது 66 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் ஆகும். இதுவே 2022ஆம் ஆண்டுக்கு பின் 62 வயதை எட்டியவர்களுக்கு 67 ஆண்டுகள் என உயர்த்தப்பட்டுள்ளது.
ஜெர்மனி: 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய பணிகளில் இருந்து ஓய்வு பெற முடியும். ஓய்வு பலன்களை பெற குறைந்தது 5 ஆண்டுகளாவது பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.
டென்மார்க்: இந்த நாட்டில் ஓய்வு பெறுவதற்கான வயது 66 ஆக இருக்கிறது .கூடிய விரைவில் இது 68 வயதாக உயர்த்தப்படும் என சொல்லப்படுகிறது டென்மார்க் நாட்டிலேயே 40 ஆண்டு காலம் தொடர்ந்து தங்கி இருந்து வேலை பார்த்தவர்களுக்கு மட்டுமே பணி ஓய்வூதியத் பலன்கள் முழுமையாக கிடைக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications