வர்த்தகம், அரசியல் என அனைத்து துறைகளிலும் குடும்பங்கள் அல்லது வாரிசுகள் ஆதிக்கம் காணப்படுகிறது. சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. வெற்றிகரமான நடிகர்கள், தயாரிப்பாளர்கள் தங்கள் வாரிசுகளை சினிமா துறையில் களம் இறக்கி அவர்கள் சினிமா குடும்பங்களாக மாறி விடுகின்றனர்.
உதாரணமாக பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் கபூர்கள், கான்கள் மற்றும் சோப்ராக்கள் குடும்பத்தை சொல்லலாம். இந்தியா முழுவதுமாக ஒவ்வொரு மொழி திரைப்படத்துறையிலும் சினிமா குடும்பங்கள் உள்ளன. இந்த சினிமா குடும்பங்களில் மிகவும் பணக்கார திரைப்பட குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்தது.

இந்த குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு, கபூர்கள் மற்றும் அக்கினேனிகளை காட்டிலும் அதிகமாகும். இந்த தெலுங்கு சினிமா குடும்பத்தில் 4 சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். நம்ம மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் அந்த குடும்பத்தின் ஒரு உறுப்பினர். அட ஆமாங்க அல்லு-கொனிடேலா குடும்பம் தாங்க நம் நாட்டின் பணக்கார சினிமா குடும்பம்.
தெலுங்கு சினிமா துறையில் மெகா குடும்பம் என்ற அழைக்கப்படும் அல்லு-கொனிடேலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிகம். இந்த மெகா குடும்பம் இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட குடும்பங்களில் ஒன்றாகும். தெலங்கு சினிமாவின் பிரபலமான நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவரான அல்லு ராமலிங்கய்யாவால் 1950ல் மெகா குடும்பம் உருவானது. அவருடைய பிள்ளைகள் மூலம் தெலுங்கு சினிமாவில் இந்த குடும்பம் வலுவாக தடம் பதித்தது.
அல்லு ராமலிங்கய்யாவின் 4 பிள்ளைகளில், அரவிந்த் ஒரு திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். மகள் சுரேகா தெலுங்கு சூப்பர்ஸ்டாரான சிரஞ்சிவீயை மணந்தார். அல்லு ராமலிங்கய்யாவின் குடும்ப உறுப்பினர்களின் திருமணம் அவர்களது வாரிசுகள் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு பல நட்சத்திரங்கள் கிடைத்தார்கள்.
உதாரணமாக ராம் சரண், அல்லு அர்ஜூன், நாகேந்திர பாபு, வருண் தேஜ், சாய் தரம் தேஜ் மற்றும் பல நடிகர்கள் தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்தார்கள். மெகா குடும்பம் அவர்களை விட ஆக்டிவான நட்சத்திரங்களை கொண்ட கபூர் குடும்பத்தை காட்டிலும் அதிக சொத்து மதிப்பை கொண்டுள்ளது.
மெகா குடும்பத்தில், சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகியோர் பணக்கார உறுப்பினர்கள். இந்த கூட்டு குடும்பத்தின் மொத்த செல்வத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோரின் பங்களிப்பு பெரியது.
மெகா குடும்பத்தின் புகழ்பெற்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பை மொத்தமாக பார்த்தால் சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியாக உள்ளது. இதில், கீதா ஆர்ட்ஸ், அஞ்சனா புரொடக்ஷன்ஸ், பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ், கொனிடேலா புரொக்டக்ஷன்ஸ் கம்பெனி உள்பட 5 திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அல்லு ஸ்டுடியோ ஆகிய உள்ளன. மேலும் நான்கு நிஜமான சூப்பர் ஸ்டார்களும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications