இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, அண்டிலியா என்னும் உலகிலேயே விலையுயர்ந்த வீட்டில் வசித்து வருகிறார். மும்பையில் மிகவும் முக்கியமான பகுதியில் பல வருட திட்டமிடல் உடன் கட்டப்பட்ட இந்த மாபெரும் வீட்டில் முகேஷ் அம்பானி குடும்பம் மட்டுமே வசித்து வருகின்றது. அண்டிலியா என்னும் பெயரை முகேஷ் அம்பானி இந்த வீட்டுக்கு வைக்க என்ன காரணம்..? அண்டிலியா என்றால் என்ன..?
27 மாடி கட்டிடத்தில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா அம்பானி மற்றும் பிருத்வி அம்பானி ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் ஆனந்த் அம்பானி, முகேஷ் அம்பானியும் பெரும் பெரும்பாலான நேரம் குஜராத்-ல் வசித்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி குடும்பம் ஓன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திருபாய் அம்பானி மறைவிற்கு பின் தனி தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரும் வளர்ச்சியை பதிவு செய்த நிலையில், தனது ஆசை காதல் மனைவிக்காக பல வருடம் திட்டமிட்டு இந்த 27 மாடி வீட்டை கட்டினார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி குடும்பம் 2012 இல் அண்டிலியாவிற்கு குடிபெயர்ந்தனர், இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 15,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது. முகேஷ் அம்பானி-யின் அண்டிலியா வீடு 173 மீட்டர் உயரம் மற்றும் 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.
இந்த உயரமான கட்டிடத்தில் பல அடுக்குகளுக்கு கார் பார்க்கிங் மட்டுமே உள்ளது. இதில் முகேஷ் அம்பானி வீட்டில் அனைவருமே கார் பிரியர்கள் என்பதால் புதிதாக எந்த கார் வந்தாலும் அதை வாங்கும் வழக்கம் கொண்டு உள்ளனர். இதுதவிர 9 அதிவேக லிஃப்ட் மற்றும் இக்கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு அறைகளும் உள்ளன. உண்மையில் ஆன்டிலியா என்றால் என்ன என்பது பலருக்குத் தெரியாது.

அண்டிலியா என்பது 15 ஆம் நூற்றாண்டில் பல உலக வரைபடங்களில் இருந்த ஒரு தீவின் பெயர். பின்னாளில் இப்படியொரு தீவு இருப்பது மறுக்கப்பட்டது மட்டும் அல்லாமல் இது கப்பலோட்டி அல்லது நிலப்பரப்பை அளவிடுவோரின் தவறு என்று நம்பப்பட்டதால் இந்த இடம் ஒரு மாயை என்று கூறப்படுகிறது. மேலும் அண்டிலியா தீவு-ஐ Isle of Seven Cities என்றும் குறிப்பிடப்படுகிறது.
சூரியன் மற்றும் தாமரை மலரை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்த வீட்டை வடிவமைக்கப்பட்டதாலும் அண்டிலியா என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் தாவரங்களைப் பொறுத்தவரை, அன்டிலியா என்பது ஆஸ்டெரேசி குடும்பத்தில் உள்ள பூக்கும் தாவரங்களின் ஒரு இனமாகும், தற்போது கியூபாவை பூர்வீகமாகக் கொண்ட ஆன்டிலியா பிராச்சிசெட்டா (Antillia brachychaeta) என்ற ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது.
இவ்விரண்டில் ஒன்று தான் முகேஷ் அம்பானி குடும்பம் இந்த வீட்டிற்கு Antilia என பெயர் வைக்க காரணமாக இருக்கும். முகேஷ் அம்பானி வீட்டை சிகாகோவை தளமாகக் கொண்ட பெர்கின்ஸ் & வில் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹிர்ஷ் பெட்னர் அசோசியேட்ஸ் ஆகிய இரண்டு பிரபலமான அமெரிக்க கட்டிடக்கலை நிறுவனங்களும் இணைந்து வடிவமைத்துள்ளன. 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வீட்டின் கட்டுமானப் பணியை முடிக்க 6 ஆண்டுகள் ஆனது. இந்த கட்டிடம் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications