சென்னை: கிரிக்கெட் புலி, ஐபிஎல் கில்லி, ஹெலிகாப்டர் மன்னன் என பல பெயர் கொண்ட நம்ம தல மகேந்திர சிங் தோனி அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர். அவர் எப்போது பேட்டை தூக்கி கொண்டு வந்தாலும் ரசிகர் பட்டாளம் விண்ணை பிளக்கும் அளவுக்கு தோனி தோனி என உற்சாக முழக்கமிடும். தன்னுடைய தலைமைத்துவ பண்பு மற்றும் எளிமையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் தோனி.
மகேந்திர சிங் தோனி இந்தியாவில் உள்ள பணக்கார கிரிக்கெட் வீரர்களுள் இவரும் ஒருவர். இவரது சொத்து மதிப்பு ரூ.1,000 கோடிகளைத் தாண்டும். கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்திருக்கும் தோனி, சுய தொழில்கள் மற்றும் முதலீட்டிலும் வல்லவராக இருக்கிறார். இவருடைய பிஸ்னஸ் போர்ட்போலியோவை பார்த்தால் ஐஐஎம் எம்பிஏ பட்டதாரிக்கு நிகராக திட்டமிட்டு நிர்வாகம் செய்து வருகிறார்.

செவன்7 என்ற பெயரில் மகேந்திர சிங் தோனி தனக்கு சொந்தமாக ஒரு ஆடை பிராண்டை வைத்து நடத்தி வருகிறார். இது ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட துணிமணிகளை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம் ஆகும்.
மகேந்திர சிங் தோனி அவரது சொந்த ஊரான ராஞ்சியில் மகி ரெசிடென்சி என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். ராஞ்சியில் உள்ள பிரபல ஹோட்டல்களில் இதுவும் ஒன்று.
இது மட்டுமின்றி பெங்களூருவில் சிபிஎஸ்ஈ பாடப்பிரிவில் செயல்படக்கூடிய ஒரு பள்ளியையும் இவர் நடத்தி வருகிறார். இதன் பெயர் எம் எஸ் தோனி குளோபல் ஸ்கூல் ஆகும் .மைக்ரோசாப்ட் உடன் இணைந்து மகேந்திர சிங் தோனி இந்த பள்ளியை நடத்தி வருகிறார்.
சாக்லேட் மற்றும் குளிர்பான பிராண்டான 7இன்க் பிரூவ்ஸ் என்ற நிறுவனத்திலும் மகேந்திர சிங் தோனி கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட் நினைவாக காக்டர்ஸ் 7 என்ற ஒரு பிராண்டையும் உருவாக்கியது.
தோனி ஸ்போர்ட்ஸ் பிட் என்ற பெயரில் நாட்டின் 200 இடங்களில் உடற்பயிற்சி நிலையங்களை அமைத்து நடத்தி வருகிறார். இது தவிர தோனி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் என்ற பெயரில் இவர் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார். மகேந்திர சிங் தோனியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர்.
இந்த தொழில்களில் இருந்து கணிசமான வருவாய் மற்றும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆகியவற்றுடன் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவையும் சேர்த்து தோனியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,040 கோடி ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications