இந்தியாவில் தொழில்துறையை மேம்படுத்தியதில் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கே பெரிய பங்களிப்பு இருக்கிறது . டாடா உள்ளிட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக இந்திய தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். அப்படி 1760களில் இருந்து இந்தியாவில் அசைக்க முடியாத தொழில் குழுமமாக இருக்கிறது வாடியா குழுமம்.
தற்போது இதன் தலைவராக இருக்கக்கூடிய நுஸ்லி வாடியா இந்தியாவின் பெரும்பணக்காரர்களில் ஒருவர். நாடியா குழுமம், துணிமணி, விமான போக்குவரத்து, ரசாயனம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால் அதற்கு காரணமாக இருப்பவர் இவர். இவருக்கும் பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

நுஸ்லி வாடியாவின் தாயார் தீனா வாடியா இவர் ஒரு இஸ்லாமிய பெண்மணி. இவர் பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவின் மகள். அந்த வகையில் முகமது அலி ஜின்னாவின் மகள் வழி பேரன் தான் நுஸ்லி வாடியா. இவரது தந்தை நெவெல் வாடியா இந்தியாவின் பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். பார்சி இனத்தை சேர்ந்தவர். நெவெல் வாடியாவின் தந்தை தான் 19ஆம் நூற்றாண்டில் மும்பையை மிகப்பெரிய காட்டன் வர்த்தக மையமாக மாற்றியவர்.
ஆடை துறையில் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத ஒரு தொழிலதிபராக இருந்தவர். அவருடைய பேரன் தான் நுஸ்லி வாடியா. அந்த வகையில் நுஸ்லி வாடியாவை பொறுத்தவரை அரசியல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பல்வேறு முக்கியமான நபர்கள் இருக்கக்கூடிய ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர். 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். 1977ஆம் ஆண்டு வாடியா குழும தொழில்களுக்கு தலைமை ஏற்றார். தற்போது வாடியா குழும நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார்.
நுஸ்லி வாடியாவின் சொத்து மதிப்பு 47 , 837 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1736 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாடியா குழுமத்தை அதன் பாரம்பரிய மாறாமல் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கும் விரிவாக்கம் செய்து வருகிறார் இவர். பாம்பே டையிங், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், கோ ஃபர்ஸ்ட், பாம்பே ரியாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நுஸ்லி வாடியா.
தன்னுடைய வருமானத்தில் கல்வி மற்றும் சுகாதார துறைக்கு பெரும் தொகையை பங்களிப்பாக தந்திருக்கிறார். நுஸ்லி வாடியா பாரம்பரியமாக தொழில் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் நிறுவன வருமானத்தை மக்கள் நல பணிகளுக்கு வழங்கி மக்களிடம் பெயர் பெற்றார். இவருடைய மகன் நெஸ் வாடியா தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் குழுவின் துணை உரிமையாளராக இருக்கிறார் .


Click it and Unblock the Notifications