கூகுள் உலகையே கட்டிப்போட்டுள்ள நிறுவனம், இணையம் சார்ந்த தொழில்நுட்பத்தில் பல்வேறு புதுமைகளை புகுத்தி தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை அவ்வப்போது நீருபித்து வருகிறது கூகுள். இப்படி நொடிக்கு நொடி வளர்ந்து வரும் கூகுள் நிறுவனத்தையே அலற வைத்த ஒரு நிறுவனம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
என்விடியா (Nvidia) என்பது ஒரு அமெரிக்கா பன்னாட்டு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும். கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரித்து வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

கிராபிக்ஸ் செயலாக்க அமைப்புகள், டேட்டா சயின்ஸுக்கான பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கணினி மற்றும் செல்போன்களுக்கான சிப்களை தயாரித்தல் என பல்வேறு துறைகளிலும் கால்பதித்துள்ளது.
வெயிட்டரால் உருவான நிறுவனம்: ஜென்சென் ஹூவாங் (Jensen Huang), என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர், தைவான் நாட்டை பூர்வீகமாக கொண்டவர். சிறுவயதிலேயே கல்வி பயில்வதற்காக குடும்பத்தினரால் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கே படிப்பை முடித்த அவர் டென்னி உணவகத்தில் வெயிட்டராக பணியாற்றினார். பார்ட் டைம் வேலை பார்த்துக் கொண்டே எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறையில் முதுகலை வரை பயின்றார். பின்னர் அட்வான்ஸுக்கு மைக்ரோ டிவைசஸ் என்ற நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
தன்னுடைய 30ஆவது வயதில் நண்பர்கள் கிறிஸ் மாலாசாவ்ஸ்கி மற்றும் கர்டில் பிரைம் ஆகியோருடன் இணைந்து என்விடியா நிறுவனத்தை தொடங்கினார். மென்பொருள்,, சிப்கள் தயாரிப்பு, வீடியோ கேம்கள், செயற்கை நுண்ணறிவு என பலதுறைகளிலும் என்விடியா நிறுவனம் கால்பதித்து வெற்றி கண்டுள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்: என்விடியா நிறுவனத்தின் அசுர வளர்ச்சியால் இவரது சொத்து மதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜென்சென் ஹூவாங் 23ஆவது இடத்தில் இருக்கிறார்.
அவரது சொத்து மதிப்பு 64.2 பில்லியன் டாலர்கள் ஆகும். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இவர் 61ஆவது இடத்தில் இருக்கிறார்.
கூகுளையே பின்னுக்கு தள்ளிய என்விடியா: செயற்கை நுண்ணறிவு துறையில் தீவிரமாக களமிறங்கியுள்ள என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நிறுவனம் என்ற பெருமை இதற்கு கிடைத்துள்ளது.
ஏனெனில் இந்நிறுவனம் தயாரிக்கும் சிப்கள், செயற்கை நுண்ணறிவால் செயல்படும் அமைப்புகளில் பெரிதளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பிப்ரவரி 14ஆம் தேதி என்விடியா நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டை விட அதிகரித்து புதிய சாதனை படைத்தது. அதாவது என்விடியாவின் அமெரிக்கா பங்குச்சந்தை மூலதன மதிப்பு 1.83 ட்ரில்லியன் டாலர்கள் 150 லட்சம் கோடி என்ற உச்சத்தை எட்டியது.
1993ஆம் ஆண்டு மென்பொருள் துறையில் கால்பதித்த என்விடியா நிறுவனம், கால மாற்றத்திற்கு தனது துறைகளை விரிவுபடுத்தி கொண்டதே வெற்றிக்கு காரணம். மென்பொருள் என்பதோடு நின்றுவிடாமல் வீடியோ கேம், கிளவுட் கம்ப்யூட்டிங், செமி கன்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு என அதிக தேவையுள்ள துறையிலும் கோலோச்சி வருகிறது.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications