சமூக வலைதளங்களில் பணம் சம்பாதிக்கும் வழிமுறையில் கிரியேட்டர்கள் உச்சத்தை அடைந்து விட்டனர் என்றே கூறலாம். ஆரம்ப காலத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் கிரியேட்டர்களை வலைவீசி தேடி வந்த நிலையில், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
இந்த காலத்து கிரியேட்டர்கள் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதில் கைத்தேர்ந்தவர்களாகி உள்ளனர். அந்த வகையில், பல கிரியேட்டர்கள் தவறான வழியிலும் வருவாய் ஈட்ட கைகொடுக்கும் சமூக வலைதளம் தான் ஒன்லிஃபேன்ஸ் (OnlyFans).
இங்கிலாந்தை சேர்ந்த சமூக வலைதளமான ஒன்லிஃபேன்ஸ் பெரியவர்களை அதிலும் குறிப்பாக பணக்காரர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சமூக வலைதளம் ஆபாசமான விஷயங்களை கிரியேட் செய்யும் கிரியேட்டர்களுக்கு வருவாய் ஈட்டிக் கொடுப்பதில் பிரத்தியேக தளமாக செயல்பட்டு வருகிறது.
ஒன்லிஃபேன்ஸ்
ஒன்லிஃபேன்ஸ் கிரியேட்டர்கள் 20 லட்சம் பேர் பணம் சம்பாதிக்க ஏராளமான வழிமுறைகளை கொண்டுள்ளனர். இதில் அடிப்படையானதே சப்ஸ்க்ரிப்ஷன்ஸ் எனப்படும் சந்தா முறை தான்.
சமூக வலைதளம்
இந்த சமூக வலைதளத்தில் ஒரு வாடிக்கையாளர், ஒரு கிரியேட்டரின் கண்டென்ட்-ஐ பார்க்க மாதாந்திர அடிப்படையிலோ அல்லது வருடாந்திர அடிப்படையிலோ கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு சமூக வலைதளத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 80 சதவீதம் கிரியேட்டர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதத்தை ஒன்லிஃபேன்ஸ் எடுத்துக் கொள்ளும்.
பணம்
சந்தாவுக்கு எவ்வளவு தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை கிரியேட்டரே முடிவு செய்வார். இது சிலருக்கு அதிக சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும். ஒன்லிஃபேன்ஸ்-இல் கிட்டி கே என்று அறியப்படும் கிரியேட்டர் மார்கன் எட்வார்ட்ஸ் சந்தாவுக்கு எவ்வளவு தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதில் குழப்பமாக இருந்துள்ளார். தற்போது மூன்று மாதங்களுக்கு 70 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 753 வரை சந்தா கட்டணமாக வசூலித்து வருகிறார்.
சேட்டிங்
ஒன்லிஃபேன்ஸ் தளத்தில் மிகவும் லாபகரமாக வருவாய் ஈட்டும் வழி வாசகர்களிடம் நேரடியாக சேட் செய்வது தான், 3 ஆயிரம் subscriber-களை கொண்டுள்ள ஆட்ரி ஆரா என்பவர் சேட்டிங் மூலம் பெரிய தொகையை வருமானமாக ஈட்டி வருகிறார்.
விளம்பர யுக்தி
புதிய வாடிக்கையாளர்களை பெற ஒவ்வொரு ஒன்லிஃபேன்ஸ் கிரியேட்டரும் பல்வேறு விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதில் ஒன்லிஃபேன்ஸ்-இல் விளம்பரம் செய்ய ஷவுட்அவுட்களை வாங்கி விற்பனை செய்வது, மற்ற சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வது உள்ளிட்டவை அடங்கும்.
பெற்றோர்களே உஷார்
ஆபாசத்திற்காகவே உருவாக்கப்பட்டது போல் மாறியுள்ள OnlyFans குறித்து பெற்றோர்கள் கட்டாயம் விழிப்புணர்வு பெற வேண்டும். இளம் தலைமுறையில் சரியான பாதையில் வழிநடத்த இத்தகைய தவறான விஷயங்கள் இருப்பதை முதலில் பெற்றோர் புரிந்துக்கொண்டால் தான் அவர்களுக்கு வழிகாட்ட முடியும்.
பெரும் பணக்காரர்கள்
OnlyFans தளத்தில் இன்றைய இளம் தலைமுறையினர், பெரும் பணக்காரர்கள் அதிகளவிலான பணத்தை கொடுக்கின்றனர், இதனால் ஆபாச வீடியோக்களை பதிவிடும் கிரியேட்டர்கள் கோடி கோடியாக பணத்தை அள்ளுகின்றனர்.


Click it and Unblock the Notifications