திருமணம் என்பது நம் அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு தருணம். இந்த திருமண வைபவத்தில் பெண்கள் தங்கள் அழகாக காட்டிக் கொள்ளவே விரும்புவார்கள்.
இதற்காகவே மெனக்கெட்டு மேக்கப் ஆர்டிஸ்டை தேர்வு செய்வது, முன்கூட்டியே ஒருமுறை மேக்கப் மற்றும் சிகை அலங்கார டிரையல் பார்ப்பது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார்கள். நாட்டிலேயே மிகப்பெரிய தொழிலதிபரின் குடும்பத்தில் மருமகளாகப் போகும் பெண் என்றால் சும்மாவா?..

அம்பானி குடும்பத்தினர் மிகப்பிரமாண்டமான முறையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமணத்திற்காக தயாராகி வருகின்றனர். அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறவுகளும் தங்களுக்கே உரிய பாணியில் தயாராகி வருகின்றனர்.
இந்த நிகழ்வுகளில் மணமகள் ராதிகா மெர்சண்ட் மற்றும் குடும்பத்தை சேர்ந்த நீதா அம்பானி , ஈஷா அம்பானி , ஸ்லோக் மேத்தா ஆகியோர் அணியக் கூடிய ஆடைகள் விரைவில் ஃபேஷனாக போகிறது. இவர்கள் தங்களது மேக்கப்பிலும் தனி கவனம் செலுத்துவார்கள். அதுவும் கூட பின்னாளில் டிரெண்டாகிவிடும்.
பெரும் பணக்கார குடும்பத்தின் இளைய மருமகளாக இருக்கும் ராதிகா மெர்சண்ட் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பார்ப்பதற்கு தேவையாக மின்னுகிறார். இதற்கு காரணமானவர் பிரபலமான ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் தான். பாலிவுட் நடிகைகளுக்கு மேக்கப் செய்யக்கூடிய கலைஞரை தன்னுடைய மேக்கப் கலைஞராக தேர்வு செய்துள்ளார் ராதிகா.
பாலிவுட்டில் பேமஸான மேக்கப் மற்றும் சிகை அலங்கார கலைஞரான லவ்லீன் ராம்சந்தானியை தான் ராதிகா இந்த பணிக்காக தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே மார்ச் மாதம் நடைபெற்ற திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகளில் ராதிகாவுக்கு மேக்கப் செய்தவர் இவர் தான்.
லவ்லீன் ராம்சந்தானி ஆலியா பட்,யாமி கௌதம், வித்யா பாலன் பர்னீதி சோப்ரா, மிருனால் தாக்கூர் மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் நடிகைகளுக்கு மிகவும் விருப்பமான ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆவார்.
லவ்லின் ராம்சந்தானி தற்போது ராதிகாவிற்கான மேகப் ஆர்ட்டிஸ்ட் ஆக செயல்பட்டு வருகிறார். லண்டனில் உள்ள மிக உயரிய நிறுவனமான டெலாமர் அகாடமியில் (Delamar Academy of Makeup and Hair)மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் தொடர்பான படிப்பினை முடித்தவர்.
இவர் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு விளம்பர நிகழ்வுகள் மற்றும் திருமணங்களுக்காக மேக்கப் கலைஞராக செயல்படுகிறார். ஒரு முறை மேக்கப் செய்ய வாடிக்கையாளரிடமிருந்து இவர் குறைந்தபட்சமாக 50,000 ரூபாய் முதல் கட்டணமாக பெறுகிறார்.
நிச்சயம் ராதிகா மெர்சண்டிடம் இவர் பல கோடிகளை பெறுவார் என்பதில் ஐயமில்லை. சமூகவலைதளங்களில் தன்னுடைய பணிகளை இவர் அடிக்கடி பதிவிடுகிறார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications